விருதுகள் மற்றும் கௌரவங்கள்

‘காந்தியடிகள் காவலர்’ விருது

  • ஐந்து-போலீஸாருக்கு’காந்தியடிகள் காவலர்’ விருது அறிவிக்கப்பட்டது
  • மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதாளர்கள்

  • விழுப்புரம் மாவட்டம் – ப.நடராஜன்,
  • விழுப்புரம் மாவட்டம் மா.சத்யாநந்தன்,
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் – சு.மணிகண்டன்,
  • கடலூர் மாவட்டம் – க.நடராஜன்
  • சேலம் மாவட்டம் வா.பெ.கண்ணன் ஆகியோர் விருதுபெற்றவர்கள் ஆவர்.
  • இவ்விருது, முதல்வரால் 2026-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
  • இவ்விருதுடன் பரிசுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வழங்கப்படுகிறது.

 ஆசிய சாதனை விருது

  • டாக்டர் மயில்வாகனன் நடராஜனுக்கு ஆசிய சாதனை விருது வழங்கப்பட்டது
  • ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை விருதை வழங்குகிறது.
  • ஆசிய அளவில்அதிகபட்ச எண்ணிக்கையில் பிரத்யேக எலும்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
  • தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமிடமிருந்து தேசிய விருது, பி.சி.ராய் விருது, பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >