புவியியல் நிலப்பகுதிகள்
இந்தியாவில் வட்டார அளவிலான பருவமழை முன்னறிவிப்பு
- பின்னணி :இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD), 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் முழுவதும் வட்டார அளவில் தென்மேற்குப் பருவமழைக்கான முன்னறிவிப்புகளை வழங்கக்கூடிய ஒரு புதிய வானிலை முன்னறிவிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பதிய முன்னறிவிப்பு முறை பற்றி
-
- இந்த முறையானது புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
- இது பின்வருவனவற்றின் கலவையைப் பயன்படுத்துகிறது:
- செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பகுப்பாய்வு
- கடந்தகால வானிலை பதிவுகள்
- உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு மாதிரிகள்
அமைப்பின் பரப்பு
- இது தற்போது 3,196 வட்டாரங்களை உள்ளடக்கியுள்ளது.
- இவை 15 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் பரவியுள்ளன.
- விவசாயத்திற்காக மழையை பெரிதும் சார்ந்திருக்கும் பருவமழை மையப் பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை பற்றி
- இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) 1875 ஆம் ஆண்டில் தேசிய வானிலை சேவையாகவும், இந்தியாவின் வானிலை ஆய்விற்கான உச்சநிலை முகமையாகவும் நிறுவப்பட்டது.
- இந்திய வானிலை ஆய்வுத் துறை, புவி அறிவியல் அமைச்சகத்தின் (MoES) கீழ் செயல்படுகிறது.
- இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
- இந்திய வானிலை ஆய்வுத் துறைக்கு (IMD) வானிலை ஆய்வுத் தலைமை இயக்குநர் (DGM) தலைமை தாங்குகிறார்.
- இந்திய வானிலை ஆய்வுத் துறை, இந்தியா மற்றும் அண்டார்டிகா முழுவதும் நூற்றுக்கணக்கான ஆய்வகங்களை இயக்குகிறது.

