பாதுகாப்பு

ஐஎன்எஸ் அரிதமான்

  • பின்னணி : இந்தியாவின் புதிய அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிதமான் என்பது முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அணுசக்தி இயங்கும் ஏவுகணை தாங்கி நீர்மூழ்கிக் கப்பல் ஆகும் மற்றும் இது தற்போது இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. 
  • அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்துவருகிறது.
  • இந்தியாவின் அணுசக்தி ஏவுகணை தாங்கி நீர்மூழ்கிக் கப்பல் (எஸ்எஸ்பிஎன்) திட்டத்தின் கீழ், முழுவதும் உள்நாட்டில் இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டமைக்கப் பட்டு படையில் சேர்க்கப்பட்டு வருகின்றன. 
  • இவை அணுசக்தியில் இயங்கக் கூடிய தாகவும். அணு ஏவுகணைகள் உள்ளிட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட வையாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

ஐஎன்எஸ் அரிதமான் பற்றி 

  • இது இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
  • இது  அரிஹந்த் வகை  நீர்மூழ்கிக் கப்பல்களில் இரண்டாவது கப்பலாகும்.
  • இது விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் மையத்தில், மேம்பட்ட தொழில்நுட்பக் கப்பல்  திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டது.

இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் 

  • ஐஎன்எஸ் அரிஹந்த் (INS Arihant) 2016ல் இந்தியாவின் முதல் உள்நாட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சேவையில் சேர்க்கப்பட்டது
  • ஐஎன்எஸ் அரிஹாட் (INS Arighat) 2024ல் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சேர்க்கப்பட்டது

நடப்பு தகவல்கள்

 

  • கேரளப் பெண்கள் உயர் கல்வித் தகுதியையும், நாட்டிலேயே மிக அதிக ஆயுட்காலத்தையும் அடைந்துள்ளனர்.
Next பாதுகாப்பு >