அஞ்சதீப் இந்திய கடற்படையில் இணைகிறது
- எட்டு நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஆழமற்ற நீர்ப் பகுதி போர்க் கப்பல்களில் மூன்றாவது கப்பலான அஞ்சதீப், சென்னையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
- இது கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது.
- இந்த நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஆழமற்ற நீர்ப் பகுதி போர்க் கப்பல் திட்டம், GRSE மற்றும் காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி கப்பல் தளம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் செயல்படுத்தப்பட்டது.
- அஞ்சதீப் கப்பலுக்கு கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் உள்ள அஞ்சதீப் தீவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 2003-ஆம் ஆண்டில் சேவையிலிருந்து விலக்கப்பட்ட முந்தைய ஐஎன்எஸ் அஞ்சதீப் என்ற பெட்யா-வகுப்பு போர்க்கப்பலின் மறுபிறவியாகும்.

