ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு (IADWS)
- பற்றி : ஆகஸ்ட் 23, 2025 அன்று ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை (IADWS) DRDO வெற்றிகரமாக சோதனை செய்தது.
-
- IADWS என்பது விமானம், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து முக்கியமான சொத்துக்கள் மற்றும் உத்திசார் இடங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட முழுமையாக உள்நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும். இது பின்வருவனவற்றை உள்ளடக்கியது.
- விரைவு எதிர்வினை மேற்பரப்பு-க்கு-வான் ஏவுகணைகள் (QRSAM): நடுத்தர தூரங்களில் அதிவேக இலக்குகளை நடுநிலையாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) ஏவுகணை: நெருக்கமான, குறைந்த உயர அச்சுறுத்தல்களுக்கான தோள்பட்டையிலிருந்து சுடக்கூடிய ஏவுகணை ஆகும்
- நேரடி ஆற்றல் ஆயுதம் (DEW): துல்லியத்துடன் ட்ரோன்களை அழிக்கும் திறன் கொண்ட உயர் ஆற்றல் லேசர் ஆயுதம்.
ஹைட்ரஜன் ரயில்
- நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ICF) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
- சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ப ரயில் போக்குவரத்தை மாற்றும் வகையில் வடக்கு ரயில்வே மண்டலத்தின் சார்பில் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் அதற்கான பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது.
- அதன்படி, ரூ.80 கோடியில் ஹைட்ரஜன் என்ஜின் தயாரிக்க சென்னையில் உள்ள ICF நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

