தேசிய நிகழ்வுகள்

LPG உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியா உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • பின்னணி : மத்திய கிழக்கு பகுதியில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • இந்த உத்தரவு அத்தியாவசியப் பொருள்கள் சட்டம், 1955 என்ற சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அவசர அதிகாரத்தை பயன்படுத்தி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • ப்ரோபேன் மற்றும் பூடேன் போன்ற ரசாயனங்களை பயன்படுத்தி எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க அனைத்து பொது மற்றும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
  • அதே நேரத்தில் இந்த ரசாயனங்களை பயன்படுத்தி பெட்ரோ இரசாயனப் பொருட்கள் தயாரிப்பதற்கு சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய நகரங்கள் PM2.5 வரம்புகளை மீறுகின்றன 

  • சூழல்: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளை, ‘ஆற்றல் மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம்’ (CREA) ஆய்வு செய்ததில், கடந்த குளிர்காலத்தில் ஆய்வு செய்யப்பட்ட 238 இந்திய நகரங்களில் 204 நகரங்களில் PM2.5 அளவானது, இந்திய நிர்ணய அளவான 40 µg/m³-ஐ விட அதிகமாக இருந்தது.
  • காசியாபாத் 172 µg/m³ என்ற சராசரி அளவோடு அதிக மாசுள்ள நகரமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து நொய்டா (166 µg/m³) மற்றும் டெல்லி (163 µg/m³) உள்ளன.
    • இந்த ஆய்வு, அக்டோபர் 1, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரையிலான CPCB-ன் ‘தொடர்ச்சியான சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களின்’ (CAAQMS) தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.
  • எந்தவொரு நகரமும் WHO நிர்ணயித்துள்ள 5 µg/m³ என்ற PM2.5 தரநிலையைப் பூர்த்தி செய்யவில்லை.
    • டெல்லி (163 µg/m³), கொல்கத்தா (78 µg/m³), மும்பை (48 µg/m³) மற்றும் சென்னை (44 µg/m³) ஆகிய நகரங்கள் தேசிய நிர்ணய அளவை விட அதிக குளிர்கால PM2.5 அளவைப் பதிவு செய்துள்ளன. பெங்களூரு (39 µg/m³) மட்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சற்றே குறைவாக உள்ளது.
  • கர்நாடகாவின் சாமராஜநகர் 19 µg/m³ சராசரி மாசு அளவோடு மிகத் தூய்மையான நகரமாக உள்ளது.
  • மிகத் தூய்மையான 10 நகரங்களில் 8 நகரங்கள் கர்நாடகாவிலும், தலா ஒரு நகரம் மத்தியப் பிரதேசம் மற்றும் மேகாலயாவிலும் அமைந்துள்ளன.

 

ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான நிதி ஆயோக் – UNICEF கூட்டு முயற்சி

  • சூழல்: நிதி ஆயோக் மற்றும் UNICEF இந்தியா ஆகியவை மாற்றத்தை விரும்பும் மாவட்டம் (Aspirational Districts) மற்றும் முன்னேற்றதை விரும்பும் வட்டங்களில் (Aspirational Blocks) சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலைகளை வலுப்படுத்துவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (SoI) கையெழுத்திட்டுள்ளன.
  • நாட்டின் பின்தங்கிய மற்றும் சேவை குறைந்த பகுதிகளில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதே இக்கூட்டு முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
  • லட்சிய மாவட்டங்கள் திட்டம் மற்றும் லட்சிய தொகுதிகள் திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்துவதே இதன் நோக்கம்.
  • அங்கன்வாடி கட்டமைப்பை மேம்படுத்துதல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகளின் (ICDS) பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் சமூகங்களிடையே ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இந்த முயற்சி கவனம் செலுத்தும்.
  • UNICEFன் IMPAct4Nutrition (I4N) தளம் மூலம், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதி, சமூக மட்டத்திலான ஊட்டச்சத்து திட்டங்களுக்கு வழிநடத்தப்படும்.
  • பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் ‘விக்சித் பாரத் 2047’ (Viksit Bharat 2047) இலக்கிற்கு ஏற்ப ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் கொண்ட மக்கள் தொகையை உருவாக்குவதற்கும், ஆதாரங்கள் சார்ந்த ஊட்டச்சத்து உத்திகளை இந்த ஒத்துழைப்பு ஊக்குவிக்கிறது.

மாற்றத்தை விரும்பும் மாவட்டத் திட்டம் (2018)

  • இது நிதி ஆயோக்கினால் தொடங்கப்பட்டது.
  • மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதன் மூலம், 112 மாவட்டங்களில் முக்கிய சமூக மற்றும் பொருளாதார குறிகாட்டிகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்னேற்றதை விரும்பும் வட்டங்கள் திட்டம் (2023)

  • இது 2023-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி நிதி ஆயோக்கினால் தொடங்கப்பட்டது.
  • இது 500 வட்டங்களில் சேவையை வலுப்படுத்தவும், அத்தியாவசிய அரசு சேவைகளை முழுமையாக அணுகுவதை உறுதி செய்யவும் உருவாக்கப்பட்ட நிர்வாக முன்முயற்சியாகும்.

இந்தியாவின் முதல் ஆற்று வழி கலங்கரை விளக்கங்கள் 

    • சூழல்: தேசிய நீர்வழிப்பாதை-2 இல் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் இந்தியாவின் முதல்  ஆற்று வழி கலங்கரை விளக்கங்களை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) அமைத்து வருகிறது.
    • பிரம்மபுத்திரா நீர்வழியில் நாள் முழுவதும் பாதுகாப்பான உள்நாட்டு பயணத்தை  உறுதி செய்யவும், ஆற்றுச் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
    • கலங்கரை விளக்கங்கள் மற்றும் ஒளிக்கப்பல்கள் இயக்குநரகம் (Directorate General of Lighthouses and Lightships) மற்றும் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (Inland Waterways Authority of India) இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
    • நான்கு கலங்கரை விளக்கங்கள் தென்கரையில் உள்ள போகிபீல் (Bogibeel), பாண்டு (Pandu), மற்றும் சில்காட் (Silghat) ஆகிய இடங்களிலும், வடகரையில் உள்ள பிஸ்வநாத் காட் (Biswanath Ghat) பகுதியிலும் நிறுவப்படும்.
    • இந்தக் கலங்கரை விளக்கங்கள் சூரிய ஆற்றலில் இயங்கும். மேலும், வழிசெலுத்தல் பாதுகாப்பை மேம்படுத்த வானிலை மற்றும் ஆற்று நிலைகளை கண்காணிக்க இதில் உணர்வான்கள் (sensors) பொருத்தப்பட்டிருக்கும்.
    • இத்திட்டம் தேசிய நீர்வழிப்பாதை-2 இல் சரக்கு போக்குவரத்தை ஆதரிப்பதுடன், வடகிழக்கு இந்தியாவில் தளவாடச் செலவுகளைக் குறைக்க உதவும்.
    • தேசிய நீர்வழிப்பாதை 2 அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் மீது அமைந்துள்ளது. 
  • இது துப்ரி (Dhubri) முதல் சாதியா (Sadiya) வரை சுமார் 891 கி.மீ தூரம் வரை நீண்டுள்ளது.

கருப்பை வாய் புற்றுநோயை ஒழிப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பு

    • சூழல்: 2030-ஆம் ஆண்டிற்குள் கருப்பை வாய் புற்றுநோயை ஒழிப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) ’90-70-90′ இலக்குகளை அடைவதில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
    • 15 வயதிற்குட்பட்ட 90% சிறுமிகள் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் முழுமையான அளவுகளைப் பெறுவதை உறுதி செய்வது.
  • 35 வயது மற்றும் 45 வயதில், 70% பெண்கள் நம்பகமான பரிசோதனை மூலம் பரிசோதிக்கப்படுவதை உறுதி செய்வது.
  • புற்றுநோய் வருவதற்கான அறிகுறி (precancerous conditions) கொண்ட 90% பெண்களுக்குச் சிகிச்சை அளிப்பதும், ஊடுருவும் கருப்பை வாய் புற்றுநோய் (invasive cervical cancer) பாதிப்புள்ள 90% பெண்களுக்கு முறையான மருத்துவ கவனிப்பை வழங்குவதும் ஆகும்.
  • கருப்பை வாய் புற்றுநோய் ஹியூமன் பாப்பிலோமா வைரஸால் (HPV) ஏற்படுகிறது.

HPV தடுப்பூசி திட்டம்

  • இத்திட்டம் பிப்ரவரி 28, 2026 அன்று தொடங்கப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.2 கோடி (12 million) 14 வயதுடைய சிறுமிகளுக்குத் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், HPV தொற்றிலிருந்து பாதுகாக்க ‘கார்டசில் குவாட்ரிவேலன்ட்’ (Gardasil Quadrivalent) தடுப்பூசி ஒரு தவணையாக (single dose) இலவசமாக வழங்கப்படும்.
    நடப்பு தகவல்கள்


    • இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடாகும்.

 

Next தேசிய நிகழ்வுகள் >