தேசிய நிகழ்வுகள்

பெருங்கற்கால பாறைக்குடைவு அறை கண்டுபிடிப்பு

  • சூழல்: கேரள மாநிலம் பனையல் (Panayal) பகுதியில் கட்டுமானப் பணியின் போது, பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 2,000 ஆண்டுகள் பழமையான செம்புரைக்கல் (Laterite) பாறைக்குடைவு ஈம அறை கண்டறியப்பட்டது. இப்பகுதி பல பண்டைய பெருங்கற்கால தொல்லியல் எச்சங்களைக் கொண்டுள்ளது.

செம்புரைக்கல் பாறைக்குடைவு அறைகள்

  • இவை செம்புரைக்கல் பாறை அமைப்புகளுக்குள் நேரடியாகக் குடைந்து உருவாக்கப்பட்ட நிலத்தடி ஈம அறைகளாகும்.
  • இவை இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்களாகப் பயன்படுத்தப்பட்டன. அங்கே மட்பாண்டங்கள் அல்லது கருவிகள் போன்ற பொருட்களும் சேர்த்து வைக்கப்பட்டன.
  • இத்தகைய அடக்க முறைகள், பெருங்கற்கால சமூகத்தினரிடையே நிலவிய சடங்குகள் மற்றும் மறுபிறப்பு குறித்த நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கின்றன.

அறைகளின் நோக்கம் 

  • இந்த அறைகள் முக்கியமாக இரண்டாம் நிலை அடக்க முறைகளுக்காக (Secondary burial practices) பயன்படுத்தப்பட்டன.
  • ஆரம்பக்கட்ட அடக்கச் சடங்குகளுக்குப் பிறகு, இறந்தவர்களின் எலும்புகள் சேகரிக்கப்பட்டு இந்த அறைக்குள் வைக்கப்பட்டன.
  • மட்பாண்டங்கள், இரும்புக்கருவிகள் மற்றும் மணிகள் போன்ற ஈமப் பொருட்கள், இறந்தவர்களின் ஆத்மா மறுமை வாழ்வில் பயன்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கையில் உள்ளே வைக்கப்பட்டன.

வெவ்வேறு உள்ளூர் பெயர்கள்

  • கேரளா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், இந்த அமைப்புகள் பல்வேறு பாரம்பரியப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன:
  • முனியறை (Muniyara): துறவியின் அறை என்று பொருள்.
  • பாண்டவர் குகை (Pandava Cave): புகழ்பெற்ற பாண்டவர்களுடன் தொடர்புடையது.
  • பீரங்கி குகை (Peeranki Cave): பீரங்கி வடிவத்தை ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது.
  • நிதிக்குழி (Nidhikuzhi): புதையல் குழி என்று பொருள்.
  • கல்பத்தாயம் (Kalppathayam): கல் பெட்டி அல்லது கல்லால் ஆன தானியக் களஞ்சியம் என்று பொருள்.

 

கேரள மொழி மசோதா

  • பின்னணி : கேரளம் மாநிலத்தில் மலையாளத்தை அலுவல் மொழியாக பயன்படுத்தும் மொழி மசோதா-2025க்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
  • இந்த மசோதாவின் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை மலையாளம் முதல் மொழிப் பாடமாக கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் மற்றும் கன்னடம் போன்ற மொழியியல் சிறுபான்மையினரின் மொழி உரிமைகள் பாதுகாக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு விதிகள்

  • பகுதி XVII, இந்திய அரசியலமைப்பின் 343 முதல் 351 வரையிலான சரத்துகள் இந்தியாவின் அலுவல் மொழிகளைக் குறிப்பிடுகின்றன.

இந்திய அரசியலமைப்பின் பகுதி XVII, சரத்து 345

  • ஒரு மாநிலத்தின் அலுவல் மொழி அல்லது மொழிகள்.
  • ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளையோ அல்லது இந்தியையோ மாநிலத்தின் எந்தவொரு அலுவல் நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படும் மொழியாக ஏற்றுக்கொள்ளலாம்.

இந்திய அரசியலமைப்பின் பகுதி XVII, சரத்து 346

  • ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் இடையே அல்லது ஒரு மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான தொடர்புக்கான அலுவல் மொழி.

இந்திய அரசியலமைப்பின் பகுதி XVII, சரத்து 347

  • ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் ஒரு பகுதியினர் பேசும் மொழி தொடர்பான சிறப்பு ஏற்பாடு.
  • மாநிலம் முழுவதும் அல்லது மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு மொழியையும் அறிவிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம்.

 

Next தேசிய நிகழ்வுகள் >