உணவு மானிய விநியோகத்திற்கான CBDC முன்னோடித் திட்டம்
- பின்னணி : புதுச்சேரியில் பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் (PMGKAY) இன் கீழ் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயம் (CBDC) அடிப்படையிலான உணவு மானிய விநியோக முன்னோடித் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
- இது டிஜிட்டல் ரூபாயை நேரடி நன்மை பரிமாற்ற (DBT) கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதன் மூலம் பொது விநியோக முறை (PDS) மூலம் உணவு மானியத்தை வழங்குவதில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்தைக் குறிக்கிறது.
- டிஜிட்டல் நாணயம் அல்லது மின்னணு ரொக்கப் பரிவர்த்தனை என்பது பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் செயல்பாடாகும். இது ரிசர்வ் வங்கியால் செயல்படுத்தப்படுகிறது.
- CBDC அடிப்படையிலான மானியம், பயனாளிகளின் டிஜிட்டல் பணப்பைகளில் (wallet) டோக்கன் வடிவில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
- அந்த டோக்கன்களை அங்கீகரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளில் உணவு தானியங்களை வாங்குவதற்கே பயன்படுத்த முடியும் .
- இந்திய ரிசர்வ் வங்கி, பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS- பிஎஃப்எம்எஸ்), புதுச்சேரி அரசு, கனரா வங்கி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து புதுச்சேரியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டம்
- கோவிட்-19ல் ஏற்பட்ட பொருளாதார இடையூறுகளை கருத்தில் கொண்டு பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தின்(கரீப் கல்யாண் அன்ன யோஜனா)கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.
- இந்தத் திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 இன் கீழ் வரும் ஒவ்வொரு நபருக்கும் பொது விநியோக முறை (PDS) மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட 5 கிலோ மானிய விலையில் உணவு தானியங்களுடன் கூடுதலாக 5 கிலோ தானியங்களை (கோதுமை அல்லது அரிசி) இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
- இது ஆரம்பத்தில் மூன்று மாத காலத்திற்கு (ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020) அறிவிக்கப்பட்டது. பின்னர் இது செப்டம்பர் 2022 வரை நீட்டிக்கப்பட்டது.
- இதன் முதன்மை அமைச்சகம் நிதி அமைச்சகம் ஆகும்.

