கவச் (Kavach) அமைப்பு
- போக்குவரத்து மோதல் தவிர்ப்பு அமைப்பு”(Traffic Collision Avoidance System TCAS) கவச் (Kavach) என்பது மோதல் தடுப்பு வசதிகளுடன் கூடிய ஒரு கேப் சிக்னல் ரயில் கட்டுப்பாட்டு அமைப்பாகும்.
- இது இந்தியாவின் தேசிய தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்த அமைப்பு பாதுகாப்பு ஒருமைப்பாட்டு நிலை தரநிலைகளை பின்பற்றுகிறது.
- இது தற்போதைய சிக்னல் அமைப்புக்கு மேலாக எச்சரிக்கையாக கண்காணிக்கும் “விழிப்புணர்வுக் காவலர்” போல் செயல்படுகிறது. ரயில் ஓட்டுனர் (Loco Pilot) “சிவப்பு சிக்னல்” நோக்கி செல்கையில் எச்சரிக்கை வழங்கி, தேவையெனில் தானாகவே பிரேக் அமைப்பை இயக்கி சிக்னலை மீறுவதைக் (signal overshoot) காத்து நிறுத்தும்.
- அவசரநிலை ஏற்படும் சமயங்களில், SoS (Save Our Soul) எனப்படும் அவசரச் செய்திகளை அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.
- மேலும், Network Monitor System மூலமாக ரயில் இயக்கங்களை மையப்படுத்தப்பட்ட நேரடி கண்காணிப்பு செய்வதற்கான வசதியும் இதில் உள்ளது.
- செக்குந்தராபாத் (தெலங்கானா) நகரில் அமைந்துள்ள இந்திய ரயில்வே சிக்னல் பொறியியல் மற்றும் தொலைத்தொடர்பு கவச் சிறப்புத் திறன் மையம் அமைந்துள்ளது.
- 1,200 ரயில் பெட்டிகளில் ‘கவச் எனப்படும் ரயில் பாதுகாப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இந்தியா, ஜப்பான் பல துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கூட்டாண்மை ஆதரிப்பு
- 2025 ஆம் ஆண்டு இந்தியா–ஜப்பான் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை பரிமாற்ற வருடம் ஆகக் கொண்டாடப்படுகிறது.
- இது இரு நாடுகளுக்குமிடையிலான இந்த துறைகளில் 40 ஆண்டுகள் நீண்ட ஒத்துழைப்பைக் குறிக்கிறது .

