உடான் (உடே தேஷ் கா ஆம் நாகரிக்) திட்டம்
- இந்த பிராந்திய இணைப்பு திட்டம் (RCS) 2016 அக்டோபர் 21-ல் தொடங்கப்பட்டது.
- செருப்பணிந்த சாமான்ய மனிதன் கூட விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் வேரூன்றியுள்ளது.
- இது விமானப் போக்குவரத்தை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டு பறப்பதை அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் கைக்கு எட்டக்கூடியதாகவும் ஆக்குகிறது.
- சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் இந்த முதன்மைத் திட்டம், இந்தியாவின் பிராந்திய இணைப்பு நிலப்பரப்பை மாற்றியமைத்துள்ளது

