தேசிய செய்திகள்

MAHA நீர் இயக்கம்

  • சூழல்: அனுசந்தான் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையும் (ANRF), ஜல் சக்தி அமைச்சகமும் இணைந்து ‘MAHA நீர் இயக்கம்’ (MAHA Water Mission) ஒன்றை அறிமுகப்படுத்தின.
  • மொத்த ஒதுக்கீடு: 200 கோடி.

நோக்கம்

  • நீர்சார் துறையில் புதுமை மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்.
  • மேம்பட்ட நீர்சார் தொழில்நுட்பங்களின் உருவாக்கம் மற்றும் பயன்பாட்டைத் துரிதப்படுத்துதல்.
  • இந்தியாவின் நீண்டகால நீர் பாதுகாப்பை வலுப்படுத்துதல்.

முன்னுரிமைத் தலைப்புகள்

இத்திட்டம் ஐந்து முக்கியத் துறைகளில் கவனம் செலுத்துகிறது:

  • நீர் வள மதிப்பீடு மற்றும் நிலையான மேலாண்மை
  • குடிநீர்
  • நீரின் தரம் மற்றும் சூழலியல் நலம்
  • நீர் பயன்பாட்டுத் திறன் மற்றும் சுழற்சிப் பொருளாதாரம்
  • காலநிலைத் தாங்குதிறன் மற்றும் தகவமைப்பு

MAHA திட்டங்கள்

  • மின்சார வாகனங்கள், ட்ரோன்கள், மருத்துவத் தொழில்நுட்பங்கள், 6G தகவல் தொடர்பு மற்றும் நீர் போன்ற துறைகளில், ‘அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை’ (MAHA) ANRF தொடங்கியுள்ளது.

முக்கியத்துவம்

  • நீர் மேலாண்மைத் துறையில், ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட புதுமைகளை ஊக்குவிக்கிறது.
  • கல்வி நிறுவனங்கள், தொழில்துறையினர், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
  • இந்தியாவுக்கான, நிலையான மற்றும் காலநிலைத் தாங்குதிறன் கொண்ட நீர்சார் தீர்வுகளுக்கு ஆதரவளிக்கிறது.
< Previous Current Affairs Next தேசிய செய்திகள் >