தேசிய துருவ மற்றும் கடல்சார் ஆராய்ச்சி மையம்
- சமீபத்தில், தேசிய துருவ மற்றும் கடல்சார் ஆராய்ச்சி மையம் (NCPOR) அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடியதுடன், நினைவு அஞ்சல் தலைகளையும் வெளியிட்டது.
தேசிய துருவ மற்றும் கடல்சார் ஆராய்ச்சி மையம் பற்றி
- இது 1998 மே 25 அன்று தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாக நிறுவப்பட்டது.
- இது முன்னர் தேசிய அண்டார்டிக் மற்றும் கடல்சார் ஆராய்ச்சி மையம் (NCAOR) என்று அறியப்பட்டது.
- இது துருவப் பகுதிகள் மற்றும் தெற்குப் பெருங்கடலில் இந்தியாவின் அறிவியல் பயணங்கள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களுக்குத் தலைமை தாங்கி முன்னணியில் இருந்து வருகிறது.
- முக்கிய அமைச்சகம்: இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம்
- அமைவிடம்: வாஸ்கோடகாமா, கோவா.

