திருநங்கையருக்கு – பாதுகாப்பான வாழ்விடங்கள்:
- ‘அரண் இல்லம்’ எனப்படும் பெயரில் திருநங்கையருக்கு பாதுகாப்பான வாழ்விடங்கள் அளிக்கும் திட்டத்தை முதல்வர் 10.2025 தொடங்கி வைத்தார்.
- திருநங்கைகள் எதிர்நோக்கும் சமூக, மனநலம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் பாதுகாப்பான, மதிப்பும், மரி யாதையும் நிறைந்த வாழ்விடச் சூழலை உருவாக்க சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- அரண் இல்லம்’ எனப்படும் சிறப்பு மையங்கள் முதல் கட்டமாக சென்னை செனாய் நகர், மதுரை அண்ணாநகர் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கை, திரு நம்பி, இடைபாவின நபர்களுக்கு ஒரு வாரம் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பாதுகாப்பான மற்றும் தற்காலிகமாக தங்குமிடம் வழங்கப்படும். ஒவ்வொரு இல்லத்திலும் 25 பேர் தங்க அணுமதிக்கப்படுவர்.
- சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல், நிதியுதவி வழங்குதல், திருநங்கையருக்கு எதிரானவன்முறை, பாகுபாடுகள் குறித்து புகார் அளிக்க உதவுதல், இலவச சட்ட உதவி மற்றும் உரிமைகள் குறித்த
- விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.
‘மிஷன் மௌசம்’ மைய திறப்பு
- வானிலை மற்றும் சூழலியல் மாறுபாடுகளை ஆராய்வதற்காக உயர் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தி ‘மிஷன் மௌசம்’ மையம் புவியியல் மற்றும் அறிவியல் அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ளது.
- சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- ‘மிஷன் மௌசம்’
- இது 2024 ஆம் ஆண்டு பூமி அறிவியல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
- இது வானிலை மற்றும் காலநிலை சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதன் மூலம் வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, மற்றும் கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளுக்கு துல்லியமான மற்றும் தாமதமின்றி பார்வை, மாதிரி அமைப்பு, மற்றும் முன்னறிவிப்பு தகவல்களை வழங்குவது உறுதிசெய்யப்படுகிறது.
நெடுஞ்சாலைகள் இணைப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம்
- உலக அளவில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகளில் இந்தியா தற்போது முதலிடத்தில் இருக்கிறது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
- உலகில் ஆட்டோ மொபைல் உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- தமிழகத்தில் உள்ள இருசக்கர தொழிற்சாலைகளில் இருந்து 50சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- உலக அளவில் பொருளாதரத்தில் நம்நாடு நான்காம் இடத்தில் உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை
- முல்லைப் பெரியாறு அணை என்பது இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வரலாற்றுப் புகழ்பெற்ற அணைகளில் ஒன்றாகும்.
- இது கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- ஆனால் இதன் நீர் தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது.
- அணை அமைந்துள்ள இடம், முல்லையாறு மற்றும் பெரியாறு என்ற இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் பகுதியை ஒட்டியதால் இதற்கு “முல்லைப் பெரியாறு” எனப் பெயர் வழங்கப்பட்டது.
- முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நோக்கம் மேற்கே பாயும் பெரியாறு ஆற்றின் நீரை கிழக்கே திருப்பி தமிழ்நாட்டின் வறண்ட மழைக்கேட்பகுதிகளுக்கு நீர் வழங்குவதாகும்.

