தமிழ்நாட்டில் புத்தொழில் சூழல்: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்”
- தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் “தமிழ்நாட்டில் புத்தொழில் சூழல்: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற அறிக்கை, புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி செயல்முறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் சந்தை அணுகலை மேம்படுத்தல் அவசியம் என்றும், பொதுப் கொள்முதல் (public procurement) முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் பரிந்துரைக்கிறது.
- அரசு நிதி பெறும் விண்ணப்ப செயல்முறை எளிமையாக இருந்தால், அதற்கு விண்ணப்பிக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
- தமிழ்நாடு அரசால் 2023 செப்டம்பர் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்.
- இந்தத் திட்டம், குடும்பத்தலைவிகளாக உள்ள பெண்களுக்கு மாதம் ₹1,000 நிதி உதவியை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

