தமிழ்நாடு நிகழ்வுகள்

முன்முயற்சிகள்/திட்டங்கள்

வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம்

  • சிறுமுகை அருகே பெத்திகுட்டையில் தமிழ்நாட்டின் முதல் வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் மற்றும் சாடிவயலில் ஒரு யானைகள் முகாமும் அமைந்துள்ளது.
  • இந்த மையத்தில் அனைத்து விலங்குகளுக்கும் ஒரு அறுவை சிகிச்சை அரங்கம்  உள்ளது, மேலும் யானைக் குட்டிகளுக்குத் தனி கொட்டகையும் உள்ளது.

வரலாறு & பண்பாடு 

குடியரசு தின அணிவகுப்பு

  • பின்னணி: 2026 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியைச் சேர்ப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு அலங்கார ஊர்திகள்

  • 2024 : குடவோலை முறையின் பெருமையை எடுத்துரைக்கும் தமிழ்நாடு அலங்கார ஊர்தி 

இடம்பெற்றது.

  • 2025 : தமிழ்நாடு அலங்கார ஊர்தி சேர்க்கப்படவில்லை.
  • 2026 : “பசுமை ஆற்றல்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு 

அரசின் அலங்கார ஊர்திக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.

முக்கிய குழுக்கள்

தமிழ்நாடு ஓய்வூதியக் குழு அறிக்கை 2025

  • பின்னணி: மூன்று பேர் கொண்ட ஓய்வூதியக் குழு தனது இறுதி அறிக்கையை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.
  • அக்குழு மூன்று ஓய்வூதியத் திட்டங்களை ஆய்வு செய்தது:
  • பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)
  • பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS)
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) (ஏப்ரல் 1, 2025 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ளது)

குழு உறுப்பினர்கள்

  • தலைவர்: ககன்தீப் சிங் பேடி
  • உறுப்பினர்கள்: கே.ஆர். சண்முகம் மற்றும் பிரதீக் தயால்

சுற்றுச்சூழல்

பாறுகழுகு பாதுகாப்பு மண்டலம்

  • சூழல்: மோயார் பள்ளத்தாக்கைச் சுற்றி பாறு  கழுகு பாதுகாப்பு மண்டலத்தை அறிவிக்கும் பகுதியாக, வனத்துறை 14 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • இது நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வரை பரவியுள்ளது.
  • பாறு கழுகு பாதுகாப்பு மண்டலத்தின் முதன்மை நோக்கம், அச்சுறுத்தல்கள் இல்லாத, குறிப்பாக டிக்ளோஃபெனாக் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த கால்நடை என்எஸ்ஏஐடி (NSAID) மருந்துகளின் பயன்பாடு இல்லாத ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதாகும்.
  • கர்நாடகா மற்றும் கேரள வனத்துறைகளின் பங்கேற்புடன் ஒருங்கிணைந்த கழுகு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >