சிறந்த நபர்கள்

மருது பாண்டியர்கள் – சிவகங்கையின் மாவீரர்கள்

பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை

  • பெரியமருது 1748 இல் பிறந்தார் மற்றும் சின்னமருது 1753 இல் பிறந்தார்.
  • பெற்றோர்: விருதுநகர் மாவட்டம், முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் சேர்வை பொன்னாத்தாள்.
  • இரு சகோதரர்களும் இராணுவ சேவையில் பயிற்சி பெற்றவர்கள்.

ஆங்கிலேயர்களுடன் மோதல்

  • சிவகங்கை இளவரசர்கள் ஆற்காடு நவாபுக்கு கப்பம் செலுத்தாததால் ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர்.
  • மன்னர் முத்துவடுகநாதர் போரில் வீரமரணம் அடைந்தார்.
  • எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மருது பாண்டியர்கள், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் உதவியுடன் ராணி வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்.

பட்டங்களும் கௌரவங்களும்

  • மருது பாண்டியர்களுக்கு ஆங்கிலேயர்கள் “சேர்வைக்காரர்கள்” என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கினர்.

பிடிப்பு மற்றும் மரணதண்டனை

  • 1801 அக்டோபர் 19 அன்று சோழபுரம் காட்டில் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டனர்.
  • 24 அக்டோபர் 1801 அன்று தூக்கிலிடப்பட்டனர்.

நினைவுகூரல்

  • 2026 ஆம் ஆண்டு மக்கள் தொடர்புத் துறை மானியத்திற்காக, தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட தீர்க்கமான போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களின் சிலை நிறுவப்பட்டது

ராஜாஜி

  • ராஜாஜி தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1878 டிசம்பர் 10-ஆம் தேதி பிறந்தார்.
  • ரௌலட் சட்டத்துக்கு எதிராக ஒத்துழைப்பு இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்றார். வைக்கம் சத்தியாகிரகம், உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுத்தார்.
  • 1937–1940: மதராஸ் மாகாண முதலமைச்சராக இருந்தார்..
  • ஜெர்மனிக்கு எதிரான போரை பிரிட்டிஷ் தொடுத்த காலத்தில் மகாத்மா காந்தியின் வெள்ளை வெளியேறு போராட்ட முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
  • முகமது அலி ஜின்னா மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண முயன்றார்.இதன் திட்டத்தை “சி. ஆர். ஃபார்முலா” என அழைத்தனர்.
  • 1946: இடைச் கால அரசில் மத்திய தொழிற்சாலைகள், கல்வி, நிதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1947–48 ல் மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றினார்.
  • இவர் 1948 ஜூன் 21 – 1950 ஜனவரி 26 வரை சுதந்திர இந்தியாவின் முதலாவது மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் .
  • ராஜாஜி 94 வயதில் 1972 டிசம்பர் 25-ஆம் தேதி காலமானார்.
< Previous Current Affairs Next சிறந்த நபர்கள் >