சிறந்த நபர்கள்

வீரமங்கை ராணி வேலு நாச்சியார்

  • பிறந்த தேதி: ஜனவரி 3, 1730, இராமநாதபுரம்
  • பெற்றோர்: தந்தை – செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி, தாய் – சக்கத்தி முத்தாத்தாள் நாச்சியார்.
  • சிறு வயதிலிருந்தே வாள்வீச்சு, வில்வித்தை, ஈட்டி எறிதல், குதிரையேற்றம் போன்ற தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றார்.
  • 1746-ல், சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்.
  • முக்கிய நிகழ்வு: 1772-ல், ஆங்கிலேயர்களுக்கு எதிரான காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதர் வீரமரணம் அடைந்தார்.
  • ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம்: ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் திண்டுக்கல் கோபால் நாயக்கர் ஆகியோரின் ஆதரவுடன் போராடினார். 1780-ல், ஆங்கிலேயர்களிடமிருந்து சிவகங்கை ராஜ்ஜியத்தை மீண்டும் கைப்பற்றினார்.
  • சிவகங்கை ராஜ்ஜியத்தை 16 ஆண்டுகள் திறம்பட ஆட்சி செய்தார்.
  • ஆங்கிலேயர்களை எதிர்த்த “முதல் இந்தியப் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை”. 
  • இறப்பு: டிசம்பர் 25, 1796

வீரபாண்டிய கட்டபொம்மன்

  • கட்டபொம்மன் ஜனவரி 3, 1760 அன்று பிறந்தார்.
  • அவரது தந்தை ஜெகவீர பாண்டியன், தாய் ஆறுமுகத்தம்மாள், மனைவி ஜக்கம்மாள், மற்றும் சகோதரர்கள் ஊமைத்துரை (குமாரசாமி) மற்றும் செவத்தையா ஆவர்.
  • கள்ளர்பட்டி போரில் பிரிட்டிஷ் படைகள் கட்டபொம்மனைத் தோற்கடித்தன. பின்னர், கட்டபொம்மன் களப்பூர் காட்டில் இருந்து புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமானால் பிடிக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
  • கட்டபொம்மன் அக்டோபர் 16, 1799 அன்று காயத்தாரில் தூக்கிலிடப்பட்டார்.
Next Current Affairs சிறந்த நபர்கள் >