இந்தியப் பொருளாதாரம்

தொழில் துறை உற்பத்திக் குறியீடு (IIP) – ஏப்ரல் 2026

  • சூழல்: இந்தியாவின் தொழில் துறை உற்பத்திக் குறியீட்டு (IIP) வளர்ச்சி 2026 ஏப்ரல் மாதத்தில் 4.9% ஆகக் குறைந்துள்ளது. 
  • கடந்த ஆண்டு ஏப்ரலில் இது 5.7% ஆக இருந்தது. 
  • மத்தியகிழக்கு போர்ச் சூழலால் எரிசக்தித் துறையில் ஏற்பட்ட மந்தநிலை வளர்ச்சிக் குறைவிற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 

துறை வாரியான செயல்திறன்

  • உற்பத்தித் துறை 6.2% வளர்ச்சி. 
  • மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகத் துறை: 4.9% வளர்ச்சி. 
  • குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு மேலாண்மைத் துறை: 6.6% வளர்ச்சி. 
  • சுரங்கம் மற்றும் குவாரித் துறை: 5.1% வீழ்ச்சி. 

அடிப்படை ஆண்டு மாற்றம்

  • IIP-இன் அடிப்படை ஆண்டு 2011-12 இலிருந்து 2022-23 ஆக மாற்றப்பட்டுள்ளது. 
  • இந்த மாற்றத்தை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. 
  • தொழில்துறை உற்பத்தியை தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப துல்லியமாக மதிப்பிடுவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
  • புதிய அடிப்படை ஆண்டின் அடிப்படையில் வெளியிடப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ தரவு இதுவாகும். 

IIP பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்கள்

  • தற்கால நுகர்வு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் 120 புதிய பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 
  • பயன்பாடு குறைந்த 64 பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. 

புதிதாக சேர்க்கப்பட்ட பொருள்கள்

  • சிசிடிவி கேமராக்கள்  
  • கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் 
  • மருத்துவ ஸ்டெண்டுகள்  
  • தடுப்பூசிகள் 
  • விமானம் மற்றும் விண்கலப் பாகங்கள் 

நீக்கப்பட்ட பொருள்கள்

  • மண்ணெண்ணெய் 
  • சிஎஃப்எல் விளக்குகள் 
  • தையல் இயந்திரங்கள் 
  • அச்சு இயந்திரங்கள் 

புதிய மாற்றங்களின் முக்கியத்துவம்

  • இந்திய தொழில்துறையின் பன்முகத்தன்மை மற்றும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை துல்லியமாக பிரதிபலிக்கிறது. 
  • புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத எரிசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தனித்தனி குறியீடுகள் மூலம் கண்காணிக்கப்படும். 

தரவு வெளியீட்டு நடைமுறை

  • இனி ஒவ்வொரு மாதத்திற்குமான IIP தரவுகளும் அந்த மாதம் முடிவடைந்த 28 நாட்களுக்குள் தொடர்ந்து வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

< Previous Current Affairs Next இந்தியப் பொருளாதாரம் >