இந்தியப் பொருளாதாரம்

நிதி ஆயோக் கூட்டம்

  • பின்னணி : பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் வழிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்திய பொருளாதாரம் – முக்கிய தரவுகள்

  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.18 டிரில்லியன் டாலரை தாண்டி உள்ளது. இதன்மூலம் ஜப்பானை பின்னுக்குதள்ளி உலகின் 4-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது 
  • கடந்த ஏப்ரலில் வேலை வாய்ப்பின்மை 5.1 சதவீதமாக இருந்தது. கடந்த நவம்பர் நிலவரப்படி இந்த சதவீதம் 4.7 ஆகக் குறைந்திருக்கிறது
  • கடந்த ஜனவரி நிலவரப்படி இந்தியாவின் ஏற்றுமதி 36.43 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த நவம்பரில் இந்திய ஏற்றுமதி 38.13 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
  • 2025–26 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3% சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
  • உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் பல்வேறு பன்னாட்டு நிதி அமைப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளன
Next Current Affairs இந்தியப் பொருளாதாரம் >