இந்தியாவில் பிறப்புகள் குறைந்து, இறப்புகள் சிறிதளவு அதிகரித்துள்ளன
- 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் பதிவு முறை அடிப்படையில் வெளியிடப்பட்ட “இந்தியாவின் முக்கிய புள்ளிவிவரங்கள் அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டு6 லட்சம் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இது 2022 ஆம் ஆண்டின்5 லட்சம் இறப்புகளை விட சிறிய அளவில் அதிகம் ஆகும்.
பிறப்புகள் குறைவு
- 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 52 கோடி பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022 ஆம் ஆண்டை விட சுமார் 2.32 லட்சம் குறைவு ஆகும்.
பிறப்பு நேர பாலின விகிதம் (Sex Ratio at Birth – SRB)
- (SRB) என்பது 1,000 ஆண் குழந்தைகளுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையாக வரையறுக்கப்படுகிறது.
- 2023 ம் ஆண்டின் பாலின விகித தரவுகள்:
- அதிக SRB கொண்டவை:
- அருணாச்சல் பிரதேசம் – 1085
- நாகாலாந்து – 1007
- கோவா – 973
- திரிபுரா – 972
குறைந்த SRB கொண்டவை:
- ஜார்கண்ட் – 899
- பீஹார் – 900
- தெலங்கானா – 906
- மகாராஷ்டிரா – 909
- குஜராத் – 910
- மொத்தத்தில், 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் பிறப்பு விகிதம் சிறிதளவு குறைந்திருந்தாலும், இறப்பு விகிதம் மிகச் சிறிய அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது.
- அதேசமயம், பிறப்பு நேர பாலின விகிதத்தில் மாநிலங்களுக்கு இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன

