அரசமைப்புச் சட்ட சிந்தி மொழி பதிப்பு வெளியீடு
- பின்னணி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிந்தி மொழிப் பதிப்பை குடியரசு துணைத் தலைவர் சிந்தி மொழி தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் வெளியிட்டார்.
- இந்த புதிய பதிப்பு தேவநாகரி மற்றும் பாரசீக எழுத்துருக்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
- அரசமைப்புச் சட்டத்தின் சிந்தி பதிப்பை வெளியிடுவது, சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக தேவநாகரி எழுத்துருவில் வெளியிடப்படுகிறது.
- வேதாந்த தத்துவமும்சுஃபி சிந்தனையும் இணையும் ஓர் தனித்துவமான சங்கமத்தை சிந்தி மொழியின் இலக்கிய மரபு பிரதிப லிப்தோடு, ஒருமைப்பாடு, அன்பு, சகோதரத்துவம் உள்ளிட்ட உலகளாவிய மதிப்பீடுகளையும் முன்னிறுத்துகிறது.
- அரசமைப்புச் சட்டம் பல மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்வதில் இந்தியா தனித்துவமாகத் திகழ்கிறது. தமிழ், குஜராத்தி, போடோ, டோக்ரி, சந்தாலி மற்றும் நேபாள மொழிகளிலும் அரசமைப்புச் சட்டம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- 1967-ஆம் ஆண்டின் 21வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம், இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி 15வது அதிகாரப்பூர்வ மொழியாகச் சேர்க்கப்பட்டது.

