இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர்
- துணை குடியரசுத் தலைவர் – இந்தியாவில் இரண்டாவது உயர்ந்த அரசியலமைப்புப் பதவியாகும்
- துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952 மற்றும் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் விதிகள், 1974 ஆல் நிர்வகிக்கப்படுகிறது.
- துணை குடியரசுத் தலைவர் ஒரு தேர்தல் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார், இதில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் உட்பட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.
- வேட்புமனு குறைந்தபட்சம் 20 தேர்வாளர்களால் முன்மொழிபவர்களாகவும், குறைந்தபட்சம் 20 தேர்வாளர்களால் ஆதரவாளர்களாகவும் கையெழுத்திடப்பட வேண்டும்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
- அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ன் கீழ் மணிப்பூர் மாநிலத்தில் 2025, பிப்ரவரி 13-ல் பிரகடனம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் தொடர்ந்து நீட்டிப்பதற்கான ஒப்புதலை அவை வழங்கியுள்ளது.
-
- இது, வரும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.
- ஒரு மாநிலத்தில் அமல்படுத்தப்படும் குடியரசுத் தலைவர் ஆட்சி வழக்கமாக 6 மாதங்கள் வரை நீடிக்கும்.
- ஆனாலும் இதனை, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் ஒவ்வொறு ஆறு மாத காலத்துக்கும் 3 ஆண்டுகள் வரை நீடிக்க முடியும்.
கல்வி நிலையங்களில் மாணவர் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்
- இந்த விவகாரம் தொடர்பாக உரிய சட்டத்தை அரசு இயற்றும் வரையில் இந்த நெறிமுறைகள் அமலில் இருக்கும்.
- அனைத்துக் கல்வி நிறுவனங்களும் சீரான மனறல பாதுகாப்பு திட்டத்தையும், தேசிய தற்கொலைகள் தடுப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
- 100 அல்லது அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள் கொண்ட கல்வி நிலையங்கள் திறன்வாய்ந்த ஆலோசகர்அல்லது உளவியலாளர் அல்லது சமூக ஆர்வலரை நியமித்து இளம் மாணவர்களின் மனநல பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

