அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி
- ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது.
- “இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை ஐசிஎப்-ல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- இந்தியா 1,200 எச்பி திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் இன்ஜின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது.
-
- ‘‘பாரம்பரிய நகரங்களுக்கு ஹைட்ரஜன்’’ என்ற திட்டத்தின் கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
‘சிக்கிள் செல் அனீமியா’ நோய்க்கு குறைந்த செலவில் மருந்து கண்டுபிடிப்பு
- சத்தீஸ்கர், ஒடிசா, பிஹார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடி மக்களை ‘சிக்கிள் செல் அனீமியா’ என்ற அரியவகை நோய் தாக்குகிறது.
- தற்போது இந்நோயைக் கண்டறிந்து, 20 நிமிடங்களில் முடிவை அறிவிக்கக்கூடிய ‘பிசிஆர்’ தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளோம்.
- உடலில் உள்ள குறைபாடான ஜீனை திருத்தி, மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படும். இதன்மூலம் வாழ்நாள் முழுவதும் மருந்து தேவையின்றி வாழலாம்.

