அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
இந்திய விஞ்ஞானிகளால் கார்பன் இல்லாத பெரோசின் அனலாக் உருவாக்கம்
- பின்னணி: சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) மற்றும் இந்திய அறிவியல் கழகம் (IISc) ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெரோசினின் முதலாவது நிலையான, கார்பன் இல்லாத அனலாக் (ஒத்த வடிவமைப்பு கொண்ட சேர்மம்) அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
பெரோசின் பற்றி
- பெரோசின் என்பது 70 ஆண்டுகளுக்கும் முன்பு கண்டறியப்பட்ட ஒரு புகழ்பெற்ற கரிம உலோகச் சேர்மம் ஆகும்.
- இதன் கண்டுபிடிப்பு, கரிம உலோக வேதியியலின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது பின்வரும் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது: பொருள் அறிவியல் ,வினையூக்கம், மருத்துவம்.
- இது பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
- இரும்பு அணு
- இரண்டு தட்டையான கார்பன் வளையங்களுக்கு இடையே சாண்ட்விச்) செய்யப்பட்டது போல் இது அமைந்திருக்கும்.
முக்கிய திருப்புமுனை
- விஞ்ஞானிகள் கார்பன் வளையங்களுக்குப் பதிலாக வெற்றிகரமாக போரான் வளையங்களை (Boron rings) மாற்றியமைத்துள்ளனர்.
இந்த புதிய சேர்மம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது
- போரான் அடிப்படையிலான வளையங்கள்
- மையப்பகுதியில் ஒரு ஆஸ்மியம் (Osmium) அணு
- இது இதனை முற்றிலும் ஒரு கனிம “சாண்ட்விச்” சேர்மமாக மாற்றுகிறது.
போரான் மற்றும் ஆஸ்மியத்தின் பங்கு
- போரான் வேதியியல் ரீதியாக கார்பனைப் போன்றது மற்றும் வளையக் கட்டமைப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது.
- போரான் சாண்ட்விச் கட்டமைப்பை நிலைநிறுத்துவதற்கு ஆஸ்மியம் சிறந்த உலோகம் என்பதை கணினி மாதிரியாக்கம் கண்டறிந்துள்ளது.
நடப்பு தகவல்கள்
திருக்குறள் (520)நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு
விளக்கம்: தன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களின் நடத்தையை அரசன் நாள்தோறும் ஆராய வேண்டும். அவர்கள் நேர்மை தவறாமல் நடந்துகொண்டால், உலகமும் நேர்மை தவறாமல் நடக்கும்.
பயன்படுத்தப்பட்ட முறை
ஆராய்ச்சியாளர்கள் பின்வருவனவற்றை வினைபுரியச் செய்தனர்
- ஒரு பாலிமெரிக் ஆஸ்மியம்-புரோமின் முன்னோடி
- போரேன்-டைமெத்தில் சல்பைடு வினையாக்கியுடன் சேர்க்கப்பட்டது.
- இந்த கலவையானது 100°C வெப்பநிலையில் எட்டு மணி நேரம் சூடாக்கப்பட்டது.
- இறுதி தயாரிப்பு நிறமற்ற திடப்பொருளாகப் பிரித்தெடுக்கப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம்
ஹைட்ரஜன் பாலங்கள் உலோகத்துடனான பிணைப்பை வலுப்படுத்துகின்றன.
இந்த சேர்மம் பின்வருவனவற்றை உருவாக்க உதவக்கூடும்:
- அதிக வெப்பநிலையிலும் நிலையான வினையூக்கிகள்
- மேம்பட்ட கனிம பொருட்கள்
- சாண்ட்விச் கட்டமைப்புகள் என்பது கார்பன் அடிப்படையிலான வேதியியலுக்கு மட்டும் வரம்பிடப்பட்டவை அல்ல என்பதை இக்கண்டுபிடிப்பு நிரூபிக்கிறது.

