பொது அறிவியல்
மலேரியா தடுப்பூசி (RTS, S/AS01E)
- பின்னணி : உலகின் முதலாவதாக அங்கீகரிக்கப்பட்ட மலேரியா தடுப்பூசியான (RTS, S/AS01E), ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் குழந்தைகளின் ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தை 13% குறைத்துள்ளதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
- மலேரியா என்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு நோயாகும்; இது பெரும்பாலும், நோய்த்தொற்றுடைய சில பெண் அனோபிலஸ் கொசுக்களின் கடி மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.
- இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவுவதில்லை.
மலேரியா தடுப்பூசி (RTS, S/AS01E) குறித்த தகவல்கள்
- சஹாரா துணைப் பகுதி ஆப்பிரிக்காவிலும், பி. ஃபால்சிபாரம் (P. falciparum) வகை மலேரியா பரவல் உள்ள பிற பகுதிகளிலும் வசிக்கும் குழந்தைகளிடையே பயன்படுத்துவதற்காக, 2021-ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டது.
- R21/Matrix-M தடுப்பூசியானது, 2023-ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது மலேரியா தடுப்பூசியாகும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
புளிக்க வைக்கப்பட்ட இயற்கை உரம்
- பின்னணி: சமீபத்தில், இந்திய உயிர்வாயு சங்கம் (IBA), 2030-ஆம் ஆண்டுக்குள் இரசாயன உரங்களுடன் 10% புளிக்கவைக்கப்பட்ட இயற்கை உரத்தைக் கட்டாயமாகக் கலக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
புளிக்கவைக்கப்பட்ட இயற்கை உரம் பற்றி
- இது சாணம், பயிர்க் கழிவுகள் மற்றும் மக்கிய உரம் போன்ற கரிமப் பொருட்களைக் கட்டுப்படுத்தப்பட்ட புளிக்கவைத்தல் செயல்முறையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை இயற்கை உரமாகும்.
- இது செயல்பாட்டில் உள்ள உயிர்வாயு அல்லது அழுத்தப்பட்ட உயிர்வாயு (CBG) ஆலைகளின் ஒரு துணைப் பொருளாகும், இது உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
புளிக்கவைக்கப்பட்ட இயற்கை உரத்தின் நன்மைகள்
- இது மண் வளத்தை மேம்படுத்துகிறது
- இது மண் அமைப்பை மேம்படுத்துகிறது
- இது நுண்ணுயிரிகளுக்கு நன்மை பயக்கும்
- இது கழிவு மேலாண்மைக்கு உதவுகிறது
- இது நிலையான விவசாயத்திற்கும் உதவுகிறது.

