நிதிநிலை சுகாதாரக் குறியீடு (FHI) 2026
- பின்னணி: நிதிநிலை சுகாதாரக் குறியீடு (FHI) 2026ன் 2-வது பதிப்பு இந்திய மாநிலங்களின் நிதிச் செயல்பாடு மற்றும் நிதி நிலைத்தன்மையை மதிப்பீடு செய்வதற்காக நிதி ஆயோக் இக்குறியீட்டை வெளியிட்டுள்ளது.
- இந்தக் குறியீடு ஐந்து முக்கியத் தூண்களின் அடிப்படையில் மாநிலங்களை மதிப்பிடுகிறது:
- செலவினங்களின் தரம் (Quality of Expenditure)
- வருவாய் திரட்டல் (Revenue Mobilisation)
- நிதி விவேகம் (Fiscal Prudence)
- கடன் குறியீடு (Debt Index)
- கடன் நிலைத்தன்மை (Debt Sustainability)
- 2014–15 முதல் 2023–24 வரையிலான 10 ஆண்டுகால மாநில நிதிப் போக்குகளை இது ஆய்வு செய்கிறது.
- 18 முக்கிய மாநிலங்களுடன் சேர்த்து, தற்போது 10 வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களும் இதில் இணைக்கப்பட்டு தனித்தனியாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்களின் தரவரிசை (FHI 2026)
- சாதனையாளர்கள் : ஒடிசா, கோவா, ஜார்கண்ட்
- முன்னோடிகள் : குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா.
- செயல்பாட்டாளர்கள் : மத்தியப் பிரதேசம், ஹரியானா, பீகார், தமிழ்நாடு, ராஜஸ்தான்.
- ஆர்வமுள்ளவர்கள் : மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப்.
வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள்
- சாதனையாளர்கள்: அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட்.
- செயல்பாட்டாளர்கள்: அசாம், மேகாலயா, மிசோரம், சிக்கிம், திரிபுரா.
- ஆர்வமுள்ளவர்கள்: இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து.

