அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

தொழில்துறை உற்பத்தி குறியீடு

  • இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP), அக்டோபர் 2025 இல் வெறும் 0.4% மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. இது கடந்த 14 மாதங்களில் மிகக் குறைந்த வளர்ச்சி வீதமாகும்.

தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) பற்றி

  • IIP என்பது இந்தியத் தொழில்களில் உற்பத்தி அளவில் ஏற்படும் குறுகிய கால மாற்றங்களை அளவிடப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய புள்ளிவிவரக் கருவியாகும்.
  • வெளியிடுபவர்: இது மத்திய புள்ளியியல் அலுவலகத்தால் (Central Statistics Office – CSO) வெளியிடப்படுகிறது. இந்தக் குழுவானது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) ஒரு பகுதியாகும்.
  • அடிப்படை ஆண்டு: இந்தக் குறியீட்டிற்கான தற்போதைய அடிப்படை ஆண்டு 2011–12 ஆகும்.
  • எட்டு முக்கிய தொழில்களின் பங்கு: IIP-இல் எட்டு முக்கிய தொழில்களின் மொத்த பங்களிப்பு 40.27% ஆகும்.
  • தொழில் மற்றும் பங்களிப்பு (சதவீதத்தில்):பெட்ரோலியம் மற்றும் சுத்திகரிப்பு உற்பத்தி) – 28.04 %, மின் உற்பத்தி 19.85 %, எஃகு உற்பத்தி – 17.92 %, நிலக்கரி உற்பத்தி – 10.33 %, கச்சா எண்ணெய் உற்பத்தி) – 8.98 %, இயற்கை எரிவாயு உற்பத்தி  – 6.88 %, சிமெண்ட் உற்பத்தி – 5.37 உரங்கள் உற்பத்தி – 2.63 %.

 

< Previous Current Affairs Next  அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் Current Affairs >

People also Read