அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

காற்றில் கரியமில வாயு அளவு புதிய உச்சம்- ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

  • வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவு கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியதாக ஐ.நா. வானிலை அமைப்பான உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
  • 2024ஆம் ஆண்டில் வளிமண்டலத்தில் காணப்பட்ட கரியமில வாயுவின் அளவு 1957-இல் அளவீடு தொடங்கியதற்குப் பிந்தைய அதிகபட்சத்தைத் தொட்டது என்றும்.
  • அந்த பசுமைக் குடில் வாயுவால் கிரகிக்கப்பட்ட சூரியனின் சூடு புவியை மேலும் வெப்பமாக்கியதால் பருவநிலை மாற்றம் உருவாகி அதிகப்படியான இயற்கைப் பேரிடர்களை ஏற்படுத்தியது என்றும் ஐ.நா சபை கூறியுள்ளது.
  • உலசு நாடுகள் கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பது காலநிலைக்கு மட்டுமன்றி பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கும் மிகவும் அவசியமன ஒன்றாகும்.
  • கடந்த 2004-ஆம் ஆண்டில் கரியமில வாயு மட்டுமன்றி மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற பிற பசுமைக் குடில் வாயுக்களும் உச்ச அளவை எட்டியுள்ளன.

உலக வானிலை அமைப்பு

  • 1950-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட WMO, வானிலை மற்றும் காலநிலை இயங்கும் நீர்வேதியியல் மற்றும் தொடர்புடைய புவியியல் அறிவியலுக்கான ஐ.நா. நிபுணத்துவ முகமையாக உருவானது.
  • வானிலை, காலநிலை, நீர்வேதியியல் மற்றும் தொடர்புடைய சுற்றுச்சூழல் துறைகளுக்கான தகவல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை எளிதாக்குதல் இதன் பணியாகும்.
  • இவ்வமைப்பு 36 உறுப்பினர்கள் கொண்டது.
  • இதில் 193 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • இதன் தலைமையகம் ஜெனீவா, ஸ்விட்சர்லாந்தில் உள்ளது.
Next Current Affairs அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் >