அரசியல் அறிவியல்

துணை குடியரசுத் தலைவர்  தேர்தல் மற்றும் தகுதிகள்:

  • துணை குடியரசுத் தலைவர் , பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களை கொண்ட தேர்தல் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • இந்த தேர்தல் ஒற்றை மாற்றத்தக்க வாக்கு முறையின் மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படி நடைபெறுகிறது. இத்தேர்தலில் வாக்களிப்பு ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெறுகிறது.

தகுதிகள்:

  • ஒருவர் துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமெனில் அவர்:
  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்
  • 35 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்
  • மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்

தகுதியின்மை:

  • இந்திய அரசு, மாநில அரசு அல்லது அதன் கீழ்செயல்படும் உள்ளூராட்சி அமைப்புகளின் கீழ் எந்தவொரு இலாப பதவியையும் வகிக்கும் நபர் தகுதியற்றவராக கருதப்படுவார்.
Next Current Affairs அரசியல் அறிவியல் >