Tag: வீரபாண்டிய கட்டபொம்மன்

சிறந்த நபர்கள்

வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த தேதி: ஜனவரி 3, 1730, இராமநாதபுரம் பெற்றோர்: தந்தை – செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி, தாய் – சக்கத்தி முத்தாத்தாள் நாச்சியார். சிறு வயதிலிருந்தே வாள்வீச்சு, வில்வித்தை, ஈட்டி எறிதல், குதிரையேற்றம் போன்ற தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றார். 1746-ல், சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார். முக்கிய நிகழ்வு: 1772-ல், ஆங்கிலேயர்களுக்கு எதிரான காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதர் வீரமரணம் அடைந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம்: ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் திண்டுக்கல் கோபால் நாயக்கர் ஆகியோரின் ஆதரவுடன் போராடினார். 1780-ல், ஆங்கிலேயர்களிடமிருந்து சிவகங்கை ராஜ்ஜியத்தை மீண்டும் கைப்பற்றினார். சிவகங்கை ராஜ்ஜியத்தை 16 ஆண்டுகள் திறம்பட ஆட்சி செய்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்த "முதல் இந்தியப் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை".  இறப்பு: டிசம்பர் 25, 1796 வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டபொம்மன் ஜனவரி 3, 1760 அன்று பிறந்தார். அவரது தந்தை ஜெகவீர பாண்டியன், தாய் ஆறுமுகத்தம்மாள், மனைவி ஜக்கம்மாள், மற்றும் சகோதரர்கள் ஊமைத்துரை (குமாரசாமி) மற்றும் செவத்தையா ஆவர். கள்ளர்பட்டி போரில் பிரிட்டிஷ் படைகள் கட்டபொம்மனைத் தோற்கடித்தன. பின்னர், கட்டபொம்மன் களப்பூர் காட்டில் இருந்து புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமானால் பிடிக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். கட்டபொம்மன் அக்டோபர் 16, 1799 அன்று காயத்தாரில் தூக்கிலிடப்பட்டார்.