Tag: மண் தோழிகள் முன்முயற்சி (Soil Sakhis Initiative )

தேசியத் திட்டங்கள்

NHAI ஆரோக்ய வனம் (Arogya Van) பின்னணி: தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள காலியான நிலப்பகுதிகளில், மருத்துவ மரங்களை நடுவதற்காக 'ஆரோக்ய வனம்' என்ற முன்னெடுப்பை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியானது, மகரந்தச் சேர்க்கையாளர்கள் , பறவைகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்குத் தேவையான மருத்துவ மர வகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், தேசிய நெடுஞ்சாலைகளில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் அமைப்பின் மீள்தன்மையை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நோக்கங்கள் மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல். மகரந்தச் சேர்க்கையாளர்கள், பறவைகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு ஆதரவளித்தல். மருத்துவ தாவரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல். காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறனை வலுப்படுத்துதல். மர வகைகள் சுமார் 36 வகையான மருத்துவத் தாவரங்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. உதாரணங்கள்: வேம்பு, நெல்லி, நாவல், புளி, எலுமிச்சை, அத்தி (Gular), மகிழம் (Maulsari). இவை அந்தந்தப் பகுதியின் காலநிலைத் தகுதியைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. முக்கியத்துவம் ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்கிறது. உள்நாட்டு மருத்துவத் தாவரங்களைப் பாதுகாக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பசுமை வழித்தடங்களை உருவாக்குகிறது.   மண் தோழிகள் முன்முயற்சி (Soil Sakhis Initiative ) பின்னணி: மேற்கு மகாராஷ்டிராவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் “மண் தோழிகள்” (Soil Sakhis) திட்டம், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, மண்ணின் தரத்தை உயர்த்தி விவசாய உற்பத்தியையும் பெருக்கி வருகிறது. தொடக்கம் (2023): வேளாண்மை மற்றும் காலநிலை நடவடிக்கை திட்டத்தின் கீழ் மான் தேசி அறக்கட்டளையால் (Mann Deshi Foundation) தொடங்கப்பட்டது. செயல்படுத்தப்படும் பகுதிகள்: மகாராஷ்டிராவின் வறட்சிக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களான சதாரா, சாங்லி, சோலாப்பூர், கோலாப்பூர் மற்றும் புனே. கோட்பாடு: கிராமப்புறப் பெண்களுக்கு மண்ணைப் பரிசோதிக்கவும், விவசாயிகளுக்கு வழிகாட்டவும் பயிற்சி அளித்து அவர்களை 'மண் தோழிகளாக' உருவாக்குதல். மண் தோழிகளின் பங்கு மண் மாதிரிகளைச் சேகரித்தல். ஆய்வகப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல். விவசாயிகளுக்கு அறிவியல் ரீதியான மண் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகளை வழங்குதல். வருமானம் மாத ஊதியம்: ₹8,000–₹10,000 + பெட்ரோல் படி. மண் பரிசோதனை கட்டணம்: ₹400–₹900. நோக்கங்கள் மண்ணின் ஆரோக்கியம் மற்றும் பயிர் விளைச்சலை மேம்படுத்துதல். காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய விவசாய முறைகளை  ஊக்குவித்தல். விவசாயிகளுக்கு அறிவியல் ரீதியான அறிவை எளிதில் கிடைக்கச் செய்தல். முக்கியத்துவம் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது. நிலையான விவசாயத்திற்கு ஆதரவளிக்கிறது. விவசாயத்தில் வறட்சியினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது.   வுமேனியா (Womaniya) பின்னணி : 'வுமேனியா (Womaniya)' முன்முயற்சியானது, பெண் தொழில்முனைவோர் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் (SHGs) தங்கள் தயாரிப்புகளை இ-சந்தை ('GeM') தளம் வாயிலாக நேரடியாக அரசு கொள்முதல் செய்பவர்களிடம் விற்பனை செய்ய வழிவகை செய்கிறது. இது கைவினைப் பொருட்கள், கைத்தறி, சணல், கயிறு பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் அலுவலகத் தளபாடங்கள் போன்ற குறிப்பிட்ட வகை தயாரிப்புகளின் கொள்முதலை உள்ளடக்கியது. வுமேனியா (Womaniya) முன்முயற்சி பற்றி இது…