மக்களுக்கிடையேயான தொடர்பை வலுப்படுத்தும் “யுவ சங்கமம்” மத்திய கல்வி அமைச்சகத்தின் “யுவ சங்கமம்” முன்னெடுப்பானது, மக்களுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்த உதவும் என மே 28, “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வானொலி வாயிலாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். முதல் நிகழ்ச்சி - 3, அக்டோபர் 2014. கடந்த ஏப்ரல் மாதம் 2023, 100-ஆவது “மனதின் குரல்“ நிகழ்ச்சி உலகம் முழுவதும் சிறப்பாக ஒளிபரப்பானது.

