அரசு நலத்திட்டங்கள் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் 'புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம்“ கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 2027- ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்தத் திட்டம் கடந்த கல்வியாண்டு (2022-23) அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் 5.28 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.