அரசியல் அறிவியல்

அரசு நலத்திட்டங்கள்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்

  • நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம்“ கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் 2027- ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்தத் திட்டம் கடந்த கல்வியாண்டு (2022-23) அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் 5.28 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.
Next அரசியல் அறிவியல் >