Tag: நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு

தமிழ்நாடு

வரலாறு மற்றும் பண்பாடு  நாயக்கர்கால காசுகளில் பெரிய கோயில் தேர் சின்னம் பின்னணி : தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சிக்கால காசுகளில் தஞ்சாவூர் பெரிய கோயில் தேர் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என நாணயவியல் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். தமிழகத் தேர்கள் திராவிட பாணி அமைப்பில் இருப்பதுடன், அவை கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், இலக்கியங்கள் மட்டுமின்றி காசுகளிலும் இடம்பெற்றுள்ளன. இந்தக் காசுகள் பெரும்பாலும் கோயில் தேர்த்திருவிழாவை சிறப்பிக்கும் வகையில், திருவிழா காலத்தில் வெளியிடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. விஜயநகர ஆட்சியின் கீழ் நாயக்க மன்னர்கள் பல வகையான காசுகளில் தேர் வடிவங்களை பொறித்து வெளியிட்டுள்ளனர். சோழ மண்டலத்தில் கிடைத்த இரண்டு வகை தேர் சின்னம் கொண்ட காசுகள் தஞ்சாவூர் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு காசில் காளை உருவம், அதன் மேல் சூரியன் மற்றும் சந்திரன், பின்னால் தேர் இடம்பெற்றுள்ளது.இது 2.3 கிராம் எடையுள்ள செம்பு காசாகும். மற்றொரு காசில் முன்புறம் கணபதி உருவமும், பின்புறம் தேர் சின்னமும் உள்ளது. இதுவும் செம்புகாசு, அதன் எடை 0.64 கிராமாகும்.   சுற்றுச்சூழல்  நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பின்னணி : தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டின் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு சார்பில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கேரள வனத்துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் குளிர்கால கன்று ஈனும் பருவத்துக்கு பிறகு, முதிர்ந்த மந்தைகளுடன் இளம் விலங்குகளும் தென்படும்போது இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.   2024-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் வரையாடுகளின் எண்ணிக்கை 1,031 என மதிப்பிடப்பட்டுள்ளது.  2025-ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் நீலகிரி வரையாடுகள் எண்ணிக்கை 1,303 என மதிப்பிடப்பட்டது. இந்த ஆய்வின் போது, பசுமலை போன்ற புதிதாக மீண்டும் குடி யேறிய வாழ்விடங்களின் தொடர்ச்சியான பயன்பாட்டையும், ஒரு தசாப்தத்துக்கும் (10 ஆண்டுகள்) மேலாக காணப்படாத பகுதிகளுக்கு இந்த இனம் திரும்பியதும் உறுதிசெய்யப்பட்டது. இதில், ஆய்வு செய்யப்பட்ட பல நிலப்பரப்புகள் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள இடங்களுடன் ஒத்துப் போகின்றன. அதன் தொடர்ச்சியாக 3-ஆவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.24) தொடங்கியது. வருகிற ஏப்.27 வரை நடைபெறும் இப் பணி, 14 வனக்கோட்டங் கள், 43 வனச்சரகங்கள், 124 வனப்பிரிவுகள் மற்றும் 177 கணக்கெ டுப்புத் தொகுதிகளை உள்ளடக்கிய, தமிழகம் முழுவதும் 3,100 கி.மீ.-க்கும் அதிகமான பரப்பளவில் நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் உள்ள அஷாம்புமொட்டை முதல் கூடலூரில் உள்ள தவளமலை வரை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.  நீலகிரி வரையாடு பற்றி  நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காகும். இதன் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணி போன்ற பண்டைய சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓங்கு மால்வரை வரையாடு உழக்களின் உடைந்துகு பெருந்தேன். இதன் பொருள்: "உயர்ந்த மலைகளிலே உலவுகிற வரையாடு…