Tag: நிதிநிலை சுகாதாரக் குறியீடு (FHI) 2026

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

நிதிநிலை சுகாதாரக் குறியீடு (FHI) 2026 பின்னணி: நிதிநிலை சுகாதாரக் குறியீடு (FHI) 2026ன்  2-வது பதிப்பு இந்திய மாநிலங்களின் நிதிச் செயல்பாடு மற்றும் நிதி நிலைத்தன்மையை மதிப்பீடு செய்வதற்காக நிதி ஆயோக் இக்குறியீட்டை வெளியிட்டுள்ளது. இந்தக் குறியீடு ஐந்து முக்கியத் தூண்களின் அடிப்படையில் மாநிலங்களை மதிப்பிடுகிறது: செலவினங்களின் தரம் (Quality of Expenditure) வருவாய் திரட்டல் (Revenue Mobilisation) நிதி விவேகம் (Fiscal Prudence) கடன் குறியீடு (Debt Index) கடன் நிலைத்தன்மை (Debt Sustainability) 2014–15 முதல் 2023–24 வரையிலான 10 ஆண்டுகால மாநில நிதிப் போக்குகளை இது ஆய்வு செய்கிறது. 18 முக்கிய மாநிலங்களுடன் சேர்த்து, தற்போது 10 வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களும் இதில் இணைக்கப்பட்டு தனித்தனியாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களின் தரவரிசை (FHI 2026) சாதனையாளர்கள் : ஒடிசா, கோவா, ஜார்கண்ட்  முன்னோடிகள் : குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா. செயல்பாட்டாளர்கள் : மத்தியப் பிரதேசம், ஹரியானா, பீகார், தமிழ்நாடு, ராஜஸ்தான். ஆர்வமுள்ளவர்கள் : மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப். வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் சாதனையாளர்கள்: அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட். செயல்பாட்டாளர்கள்: அசாம், மேகாலயா, மிசோரம், சிக்கிம், திரிபுரா. ஆர்வமுள்ளவர்கள்: இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து.