நிதி ஆயோக் கூட்டம் பின்னணி : பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் வழிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்திய பொருளாதாரம் – முக்கிய தரவுகள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.18 டிரில்லியன் டாலரை தாண்டி உள்ளது. இதன்மூலம் ஜப்பானை பின்னுக்குதள்ளி உலகின் 4-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது கடந்த ஏப்ரலில் வேலை வாய்ப்பின்மை 5.1 சதவீதமாக இருந்தது. கடந்த நவம்பர் நிலவரப்படி இந்த சதவீதம் 4.7 ஆகக் குறைந்திருக்கிறது கடந்த ஜனவரி நிலவரப்படி இந்தியாவின் ஏற்றுமதி 36.43 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த நவம்பரில் இந்திய ஏற்றுமதி 38.13 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. 2025–26 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3% சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் பல்வேறு பன்னாட்டு நிதி அமைப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளன

