தேசிய தண்ணீர் விருதுகள்: இவ்விருதை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. தென் மண்டலத்தில் சிறந்த மாவட்டத்துக்கான விருது திருநெல்வேலிக்கு கிடைத்துள்ளது. நோக்கம் "நீர்வளம் நிறைந்த இந்தியா' என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை எட்டும் வகையில் மேற்கொள்ளப்படும் நற்பணி மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, தேசிய தண்ணீர் விருதுகள் வழங்கப்படுகின்றன. தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தி, தண்ணீர் பயன்பாட்டில் சிறந்த வழிகளைப் பின்பற்ற ஊக்குவித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன. சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம ஊராட்சி, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, சிறந்த தண்ணீர் பயனர் சங்கம் என மொத்தம் 10 பிரிவுகளில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மாநிலம் மகாராஷ்டிரம் குஜராத் ஹரியாணா சிறந்த மாவட்டம் தென் மண்டலத்தில் திருநெல்வேலி முதலிடம் சிறந்த நீர் பயனர் சங்கம் கோயம்புத்தூர் மாவட்டம் வேட்டைக்காரன் புதூர் கால்வாய் உடையக்குளம் கிராம நீர் பயனர் சங்கம் சிறந்த கிராம ஊராட்சி திருவள்ளூர் மாவட்டம் பாலாபுரம் ஊராட்சி-1 சத்தீஸ்கர் - கான்கேர் மாவட்ட - துமர்பானி ஊராட்சியும்- 3ம் இடம் சிறந்த தொழில் நிறுவனம் காஞ்சிபுரத்தில் உள்ள அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம்- 1 ம் இடம் நீர் பாதுகாப்புத் திட்டங்கள்: தெலங்கானா முதலிடம், கோயம்புத்தூர் இரண்டாமிடம் மத்திய அரசின் 'நீர் சேகரிப்பில் மக்களின் பங்கேற்பு முன்னெடுப்பின் கீழ், 5 மண்டலங்களாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. குறைந்தபட்சம் 10,000 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மேற்கூரை மழைநீர் சேகரிப்பு போன்ற செயற்கையான நிலத்தடி நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி, புனரமைத்து, பராமரிக்க விருதாளர்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்கிறது. நீர் பாதுகாப்பு திட்டங்களில் தெலங்கானா முதலிடம் பிடித்துள்ளது. சத்தீஸ்கர் இரண்டாவது இடத்தையும், ராஜஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. தென்மண்டலத்தில் கோயம்புத்தூர்2-ஆவது இடத்தையும், நாமக்கல் 10-ஆவது இடத்தையும், ராமநாதபுரம் 13-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. நவ.18-ஆம் தேதி தேசிய தண்ணீர் விருதுகளுடன் சேர்த்து இந்த விருதுகளையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்க உள்ளார். தோட்டா தரணிக்கு ‘செவாலியே' விருது: கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான 'செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டில் ஒளிரும் பெரியார் ஈ.வெ.ரா. ஓவியத்தைத் தந்த தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான 'செவாலியே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

