தேஜஸ் எம்கே-1ஏ விமானங்கள் விமானப்படைக்காக 83 தேஜஸ் எம்கே-1ஏ ரக விமானங்களைக் கொள் முதல் செய்வதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டது. தேஜஸ் என்பது ஒற்றை என்ஜினைக் கொண்ட பல் நோக்கு போர் விமானமாகும். தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானங்களில் அதிநவீன சாதனங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் மின்னணு முறையிலான ராடார் கருவி, நவீன போர்க்கருவிகள், ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் ஆகியவையம் இந்த விமானங்களில் இடம் பெற்றிருக்கும். இந்த விமானங்களில் இடம்பெற்றிருக்கும் ஆயுதங்களில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாகும். வான் பாதுகாப்பு, கடல் சார் கண்காணிப்பு, தாக்குதல் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் தேஜஸ் விமானங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

