Tag: தேசிய துருவ மற்றும் கடல்சார் ஆராய்ச்சி மையம்

தேசிய செய்திகள்

தேசிய துருவ மற்றும் கடல்சார் ஆராய்ச்சி மையம்  சமீபத்தில், தேசிய துருவ மற்றும் கடல்சார் ஆராய்ச்சி மையம் (NCPOR) அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடியதுடன், நினைவு அஞ்சல் தலைகளையும் வெளியிட்டது. தேசிய துருவ மற்றும் கடல்சார் ஆராய்ச்சி மையம் பற்றி    இது 1998 மே 25 அன்று தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாக நிறுவப்பட்டது. இது முன்னர் தேசிய அண்டார்டிக் மற்றும் கடல்சார் ஆராய்ச்சி மையம் (NCAOR) என்று அறியப்பட்டது. இது துருவப் பகுதிகள் மற்றும் தெற்குப் பெருங்கடலில் இந்தியாவின் அறிவியல் பயணங்கள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களுக்குத் தலைமை தாங்கி முன்னணியில் இருந்து வருகிறது. முக்கிய அமைச்சகம்: இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் அமைவிடம்: வாஸ்கோடகாமா, கோவா.