Tag: தேசிய குடிமைப் பணிகள் தினம்

முக்கிய தினங்கள்

தேசிய குடிமைப் பணிகள் தினம்  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது.  1947-ஆம் ஆண்டு சர்தார் வல்லபாய் படேல் குடிமைப் பணி அதிகாரிகளிடையே ஆற்றிய உரையை நினைவுகூரும் வகையில், ஏப்ரல் 21 அன்று தேசிய குடிமைப் பணிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது சுதந்திர இந்தியாவில் குடிமக்களை மையமாகக் கொண்ட "எஃகுச் சட்டம்" (Steel Frame) எனப்படும் நிர்வாக அமைப்பின் அடித்தளத்தைக் குறிக்கிறது. இத்தினமானது, குடிமைப் பணி அதிகாரிகளிடையே சுய ஆய்வு, பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பு மற்றும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் லட்சியத் தொகுதிகள் மேம்பாடு மூலம் "விக்சித் பாரத்" (வளர்ந்த இந்தியா) என்பதை மையமாகக் கொண்டுள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய குடிமைப் பணிகளின் தந்தை என்று லார்ட் கார்ன்வாலிஸ் கருதப்படுகிறார்.அதேவேளையில், நவீன குடிமைப் பணிகளின் சிற்பியாக சர்தார் வல்லபாய் படேல் போற்றப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் குடிமைப் பணிகள் கட்டமைப்பு, சரத்து 312 மற்றும் 1951-ஆம் ஆண்டின் அகில இந்திய பணிகள் சட்டத்தை (All India Services Act, 1951) அடிப்படையாகக் கொண்டது.