Tag: ஜோதிராவ் புலே

சிறந்த நபர்கள்

ஜோதிராவ் புலே ஜோதிராவ் புலே 11 ஏப்ரல் 1827 பிறந்தார் . இவர் சாதியப் படிநிலைகளை எதிர்த்தவர் மற்றும் தலித் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு முன்னோடி சமூகச் சீர்திருத்தவாதி ஆவார். சாவித்ரிபாய் புலேவுடன் இணைந்து, 1848-இல் இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியைத் திறந்தார்.  மேலும் 1855-இல் புனேவில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்காக இரவுப் பள்ளிகளைத் தொடங்கினார். சாதிப் பாகுபாடுகளை எதிர்த்துப் போராடவும் சமத்துவத்தை மேம்படுத்தவும் 1873-இல் சத்யசோதக் சமாஜை நிறுவினார். தனது 'குலாம்கிரி' நூலில், இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறையை அமெரிக்க அடிமைத்தனத்துடன் ஒப்பிட்டார். ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குக் கட்டாயக் கல்வியையும் பொருளாதார மேம்பாட்டையும் வழங்கப் பரிந்துரைத்தார். 1888-ஆம் ஆண்டு விதல்ராவ் கிருஷ்ணாஜி வந்தேக்கரால் இவருக்கு "மகாத்மா" என்னும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது