சாவித்திரிபாய் பூலே 1831 ஜனவரி 3 அன்று மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் நைகான் கிராமத்தில் பிறந்தார். 1848-ஆம் ஆண்டு, கணவர் ஜோதிராவ் பூலே உடன் இணைந்து, பெண்களுக்கான முதல் பள்ளியை மகாராஷ்டிர மாநிலம் பிடேவாடாவில் தொடங்கினார். இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் எனப் போற்றப்படுகிறார். .1852-இல் ‘மகிளா சேவா மண்டல்’ அமைப்பை நிறுவினர். 1863-இல் சிசுக் கொலை தடுப்பு இயக்கத்தை தொடங்கினர். 1852-இல் ஆங்கில அரசு ‘சிறந்த ஆசிரியர் விருது’ வழங்கியது. 1998-இல் இந்திய அரசு அஞ்சல் தலையை வெளியிட்டது. 2015-இல் புணே பல்கலைக்கழகம் அவரது பெயரைச் சூட்டப்பட்டது.

