Tag: சர்வதேச யோகா தினம்

முக்கிய தினங்கள்

உலக ஒட்டக தினம் உலக ஒட்டக தினம் ஆண்டுதோறும் ஜூன் 22 அன்று கொண்டாடப்படுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஒட்டக மாநாட்டின் கருப்பொருள் "Camel as Climate Resilient Dairy Animal”,என்பதாகும். சர்வதேச யோகா தினம் யோகா தினம் என்பது யோகாவை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும்; ஐக்கிய நாடுகள் சபை 2014-இல் இதனை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. ஜூன் 21, 2026 அன்று கடைப்பிடிக்கப்படும் 12-வது சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் Yoga for Healthy Ageing என்பதாகும். நடப்பு தகவல்கள்   1897-ஆம் ஆண்டு ஜூன் 22-அன்று, புனேயில் இந்தியத் தேசியவாதப் புரட்சியாளர்களான சாபேகர் சகோதரர்கள் (தாமோதர் மற்றும் பாலகிருஷ்ணா), பிரிட்டிஷ் பிளேக் நோய் தடுப்பு ஆணையர் வால்டர் சார்லஸ் ராண்ட் மற்றும் அவருக்குப் பாதுகாப்பாக வந்த ராணுவ அதிகாரி ஆகியோரைக் கொன்றனர். திருக்குறள் (எண் 862) அதிகாரம்: பகை மாட்சி அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு   விளக்கம் :ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாத வனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும். 'காஞ்சன் தேவி குழு காஞ்சன் தேவி கமிட்டி என்பது ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாப்பதில் அதன் முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்வதற்காக 25 மே 2026 அன்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு ஆகும். வைப் கோடிங் வைப் கோடிங் என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு உதவியுடனான மென்பொருள் உருவாக்க அணுகுமுறையாகும். இதில், உருவாக்குநர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை இயல்பு மொழியில் விவரிக்க, செயற்கை நுண்ணறிவு பெரும்பாலான குறியீடுகளை உருவாக்குகிறது. கலம்காரி ஓவியம்  இது ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும், கையால் வரையப்பட்ட அல்லது அச்சுரு மூலம் அச்சிடப்பட்ட பருத்தித் துணி மற்றும் ஓவியங்களின் மிகவும் பிரபலமான ஒரு கலை வடிவமாகும். 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில், இது ஒரு துணி சார்ந்த கலை மரபாக உருவானது. 'கலம்' என்ற சொல் பேனாவையும், 'காரி'  என்ற சொல் கைவினைத்திறனையும் குறிக்கிறது. டோங்ரியா கோந்த் பழங்குடியினர் இது குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழு (PVTG) சமூகம். ஒடிசாவின் கலஹண்டி மற்றும் ராயகடா மாவட்டங்களில் பரவியுள்ள நியாம்கிரி மலைகளில் டோங்ரியா கோண்ட்ஸ் பழங்கால குடியிருப்பாளர்கள்

வரலாறு

முக்கிய தினங்கள்  சர்வதேச யோகா தினம் யோகா பயிற்சியை கொண்டாட ஜூன் 21 அன்று  சர்வதேச யோகா தினம் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : ”Yoga for Self and Society.” இந்த தினம் முதன்முதலில் 2014 இல் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. குறிப்பு பதஞ்சலி யோகாவின் தந்தை என்று புகழப்படுகிறார். உலக கதிர் அரிவாள் ரத்தசோகை விழிப்புணர்வு தினம் கதிர் அரிவாள் ரத்தசோகை நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று உலக கதிர் அரிவாள் ரத்தசோகை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Hope Through Progress: Advancing Sickle Cell Care Globally தேசிய கதிர் அரிவாள் ரத்தசோகை ஒழிப்பு இயக்கம் 2047 ஆம் ஆண்டிற்குள் கதிர் அரிவாள் ரத்தசோகையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.