Tag: கூல் ரூஃப் (Cool Roof) திட்டத்தின் விரிவாக்கம்:

தமிழ்நாடு நிகழ்வுகள்

முன்முயற்சி / திட்டம் கூல் ரூஃப் (Cool Roof) திட்டத்தின் விரிவாக்கம்: சூழல்: தமிழ்நாடு முழுவதும் 297 பசுமை பள்ளிகளுக்கு கூல் ரூஃப் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. கூல் ரூஃப் திட்டம் தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டம் 2025–26யின் செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ், அம்பத்தூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் வகுப்பறைகள் வெப்ப-பிரதிபலிப்பு வெள்ளை வண்ணப்பூச்சுடன் பூசப்பட்டன. வெப்ப-பிரதிபலிப்பு வெள்ளை வண்ணப்பூச்சைப் பயன்படுத்தி உட்புற வெப்பநிலையில் 1.5°C–3°C குறைத்து, அதனை சென்சார்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் இந்தியாவில் தனது சொந்த காலநிலை மாற்ற இயக்கத்தைத் தொடங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்த இயக்கத்தின் நோக்கம் தமிழகத்தை காலநிலை அறிவுடன் செயல்படும் (Climate Smart) மாநிலமாக மாற்றுவதாகும். காலநிலை மாற்றத்திற்குப் பதிலளிக்க கூட்டு மனித முயற்சிகளை விரிவுபடுத்துதல்.  பசுமை இல்ல வாயுக்கள் (Greenhouse Gases) வெளியீட்டைக் குறைத்தல்.