Tag: எகிப்தின் பண்டைய துறைமுக நகர அகழ்வாராய்ச்சி

தமிழ்நாடு விவகாரங்கள்

கலை வித்தகர்’ விருது கலைவித்தகர் விருது பெற விரும்பும் திரைத்துறையினர் நவ.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழசு அரசு அறிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில் 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' 2022-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். விருதுக்கான தகுதிகள்: நடிகர், நடிகையர், இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் மற்றும் பாடகி, ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், கலை இயக்குநர், ஒலிப்பதிவாளர், சண்டைப் பயிற்சியாளர், நடன ஆசிரியர், ஒப்ப னைக் கலைஞர் மற்றும் தையற் கலைஞர் என தமிழ்த் திரைப்பட உலகுக்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்குஇவ்விருது வழங்கப்படுகிறது உழவர் நல சேவை மையங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் முதல்வரின் உழவர் நல சேவை மையங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கிவைக்கவுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த 20 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில், 1,000 'முதல்வரின் உழவர் நல சேவை' மையங்களுக்கு 30 சதவிதம் மானியம் வழங்கும் திட்டம் தமிழக அரசு சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் சேவை மையங்களுக்கு 30 சதவீதம் அதாவது ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது. இதற்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பித்தவர்களில் வங்கிகளில் கடன் பெறும் வகையில் 973 பயனாளர்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வங்கிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. இதில், இதுவரை 413 பேருக்கு வங்கிக் கடன் கிடைத்துள்ளது.. நலசேவை மையங்களை திறம்பட நிர்வகிக்க 15 நாள்களுக்கு அரசு சார்பில் உரிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஒற்றை செல் ஓமிக்ஸ்’ பயன்பாட்டு ஆராய்ச்சி ஆய்வகம் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான ஒற்றை செல் ஓமிக்ஸ்' பயன் பாட்டு (ஸ்காட்) ஆராய்ச்சி ஆய்வகத்தை இந்திய ரயில்வே நிதி நிறுவனத்தின் உதவியுடன் சென்னை ஐஐடி நிறுவுகிறது. நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்படும் இந்த ஆய்வுகத்தை நிறுவ சென்னை ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு ஐஆர் எஃப்சி ரூ.10.83 கோடி வழங்கியுள்ளது. அதிநவீன கருவிகளுடன் கூடிய ஸ்காட் ஆய்வகம், புற்றுநோய், இதய நோய், தொற்று, அழற்சி, வளர்சிதை மாற்றம். இதர தொற்றாத நோய்கள் போன்றவற்றுக்கு ஆரம்ப கால நோயறிதல், பயோ மார்க்கர் கண்டுபிடிப்பு, மருந்து பரிசோதனை ஆகியவற்றை எளிதாக்கும். தமிழ் சமூகத்தின் வரலாற்று ஆய்வை மேற்கொள்ள மாதம் ரூ.50,000 உதவித்தொகை தமிழ்நாடு ஆவனக் காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து, தமிழ்நாட்டில் பெருமை மிகு வரலாற்றை வெளிக்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வீதம் ஓராண்டுக்கு ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் 1633…