Tag: உலக அறிவுசார் சொத்துரிமை தினம்

முக்கிய தினங்கள்

உலக அறிவுசார் சொத்துரிமை தினம் உலக அறிவுசார் சொத்துரிமை தினம், படைப்பாற்றல், புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இது, உலகளாவிய அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு முகமையான 'உலக அறிவுசார் சொத்து அமைப்பு'  மூலம் வழிநடத்தப்படுகிறது. உலக அறிவுசார் சொத்துரிமை தினம் 2026-ன் கருப்பொருள் : "அறிவுசார் சொத்துரிமை மற்றும் விளையாட்டு: தயார், தொடங்கு, புத்தாக்கம் செய்" (IP and Sports: Ready, Set, Innovate). 2026-ன் இந்த கருப்பொருள், விளையாட்டுத் துறையில் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றலை இயக்குவதில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கினை மையமாகக் கொண்டுள்ளது. நடப்பு தகவல்கள் கட்சித் தாவல் தடைச் சட்டம் இந்திய அரசியலமைப்பின் 10-வது அட்டவணை (கட்சித் தாவல் தடைச் சட்டம்) நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) கட்சி மாறுவதால் ஏற்படும் தகுதி நீக்கம் குறித்து விளக்குகிறது. பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் அவர் தனது அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியை விருப்பத்துடன் துறக்கும்போது. கட்சியின் கட்டளைக்கு (whip) எதிராக வாக்களிக்கும்போதோ அல்லது வாக்களிக்காமல் புறக்கணிக்கும்போதோ (முன் அனுமதி இன்றி). தேர்தலுக்குப் பிறகு சுயேச்சை உறுப்பினர் ஏதேனும் அரசியல் கட்சியில் சேரும்போது. நியமன உறுப்பினர், பதவியேற்று 6 மாதங்களுக்குப் பிறகு ஏதேனும் அரசியல் கட்சியில் சேரும்போது. விலக்குகள்  குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைய உடன்பட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். நடுநிலைமையை பேணுவதற்காக சபாநாயகர் அல்லது தலைவர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யலாம், பின் மீண்டும் சேர்ந்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார். முக்கிய அம்சங்கள் தகுதி நீக்கம் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் அவையின் சபாநாயகர் அல்லது தலைவரிடம் உள்ளது. கிஹோடோ ஹோலோஹான் 1992  வழக்கின்படி, சபாநாயகரின் இந்த முடிவானது நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்பட்டது. 91-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் (2003) கட்சிப் பிளவு ( மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்) குறித்த பிரிவை நீக்கியது. அமைச்சரவையின் எண்ணிக்கையை அவையின் மொத்த பலத்தில் 15% ஆகக் குறைத்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் வரை எந்தவொரு அமைச்சர் பதவியையோ அல்லது ஊதியம் பெறும் அரசியல் பதவியையோ வகிக்க முடியாது. காற்றாலை மின் உற்பத்தி நாட்டின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 56 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் 6 ஜிகாவாட் மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தித் திறனில், இந்தியா உலக அளவில் 4-ஆவது இடத்தில் உள்ளது.  தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள், இத்துறையில் முன்னோடியாகத் திகழ்கின்றன. குஜராத்தின் கட்ச், பதான், பனாஸ்கந்தா போன்ற பகுதிகளில் இப்போது மாபெரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காக்கள் உருவாகி வருகின்றன. 

வரலாறு

முக்கிய தினங்கள் உலக அறிவுசார் சொத்துரிமை தினம்  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26-ம் தேதி உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது 2000 ஆம் ஆண்டில் உலக அறிவுசார் சொத்து அமைப்பால் (WIPO) நிறுவப்பட்டது. காப்புரிமைகள், பதிப்புரிமை மற்றும் வர்த்தகமுத்திரைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். உலக அறிவுசார் சொத்துரிமை தினம் 2023 இன் கருப்பொருள் :"பெண்கள் புதுமை மற்றும் படைப்பாற்றலை துரிதப்படுத்துதல் " பாதுகாப்பு ராணுவ செலவினம்: 4-ஆவது இடத்தில் இந்தியா! ராணுவத்துக்கான மொத்த செலவினமானது சர்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 2.2 சதவீதமாக உள்ளது. ராணுவத்துக்கு அதிகமாக செலவிடும் நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் 3-ஆவர் இடத்தில் இருந்த இந்தியாவை கடந்த ஆண்டில் ரஷியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.  இந்தியா 4-ஆவது இடத்திலும், சவூதி அரேபியா 5-ஆவது இடத்திலும் உள்ளன. உலக அமைப்புகள் உடன்படிக்கைகள்  மற்றும் மாநாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தை இந்தியா நடத்துகிறது. 2023 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக இந்தியா 28 ஏப்ரல் 2023 அன்று புதுதில்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்த உள்ளது. பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்குள் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் பயனுள்ள பன்முகத்தன்மை தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர்கள் விவாதிக்க உள்ளனர். SCO பற்றி: SCO என்பது நிரந்தர அரசுகளுக்கிடையேயான சர்வதேச அமைப்பாகும். இது 2001 இல் உருவாக்கப்பட்டது. இது ஒரு யூரேசிய அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ அமைப்பாகும், இது பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 இல் SCO உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. உறுப்பு நாடுகள்: கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான். தலைமையகம்: பெய்ஜிங், சீனா