Tag: உணவு மானிய விநியோகத்திற்கான CBDC முன்னோடித் திட்டம்

தேசிய திட்டங்கள்

உணவு மானிய விநியோகத்திற்கான CBDC முன்னோடித் திட்டம் பின்னணி : புதுச்சேரியில் பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் (PMGKAY) இன் கீழ் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயம் (CBDC) அடிப்படையிலான உணவு மானிய விநியோக முன்னோடித் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.  இது டிஜிட்டல் ரூபாயை  நேரடி நன்மை பரிமாற்ற (DBT) கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதன் மூலம் பொது விநியோக முறை (PDS) மூலம் உணவு மானியத்தை வழங்குவதில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்தைக் குறிக்கிறது.  டிஜிட்டல் நாணயம் அல்லது மின்னணு ரொக்கப் பரிவர்த்தனை என்பது பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் செயல்பாடாகும். இது ரிசர்வ் வங்கியால் செயல்படுத்தப்படுகிறது.  CBDC அடிப்படையிலான மானியம், பயனாளிகளின் டிஜிட்டல் பணப்பைகளில் (wallet) டோக்கன் வடிவில் நேரடியாக வரவு வைக்கப்படும். அந்த டோக்கன்களை அங்கீகரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளில் உணவு தானியங்களை வாங்குவதற்கே பயன்படுத்த முடியும் . இந்திய ரிசர்வ் வங்கி, பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS- பிஎஃப்எம்எஸ்), புதுச்சேரி அரசு, கனரா வங்கி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து புதுச்சேரியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டம்  கோவிட்-19ல்  ஏற்பட்ட பொருளாதார இடையூறுகளை  கருத்தில் கொண்டு பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தின்(கரீப் கல்யாண் அன்ன யோஜனா)கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.  இந்தத் திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 இன் கீழ் வரும் ஒவ்வொரு நபருக்கும் பொது விநியோக முறை (PDS) மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட 5 கிலோ மானிய விலையில் உணவு தானியங்களுடன் கூடுதலாக 5 கிலோ தானியங்களை (கோதுமை அல்லது அரிசி) இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.  இது ஆரம்பத்தில் மூன்று மாத காலத்திற்கு (ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020) அறிவிக்கப்பட்டது. பின்னர் இது செப்டம்பர் 2022 வரை நீட்டிக்கப்பட்டது. இதன் முதன்மை அமைச்சகம் நிதி அமைச்சகம் ஆகும்.