ஆப்ரேஷன் சாகர் பந்து சைப்ளோன் திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இந்தியா "ஆப்பரேஷன் சாகர் பந்து" என்ற திட்டத்தைத் தொடங்கியது. அத்தியாவசிய நிவாரணப் பொருட்களின் முதல் தொகுப்பு, ஐ.என்.எஸ். விக்ராந்த் (விமானந்தாங்கி கப்பல்) மற்றும் ஐ.என்.எஸ். உதய் கிரி (திறன்மிக்க போர்க் கப்பல்) மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்டன இந்த உதவி, இந்தியாவின் பின்வரும் கொள்கைகளால் வழிநடத்தப்படுவதாகப் பிரதமர் உறுதிப்படுத்தினார்: அண்டை நாடுகளுக்கு முதலிடம் கொள்கை. சாகர் (MAHASAGAR - Mutual And Holistic Advancement for Security and Growth Across Regions) தொலைநோக்கு பார்வை. இந்திய கடற்படையின் சர்வதேச கடற்படைக் கூட்டம் 2026 இந்திய கடற்படை, 2026 பிப்ரவரி மாதம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படைக் கூட்டத்தை (IFR - International Fleet Review) நடத்த உள்ளது. கருப்பொருள் : "கடல்கள் வழியே ஒற்றுமை" மற்றும் "நட்பின் பாலங்களை" வலுப்படுத்துதல் இந்த IFR நிகழ்வானது, இந்தியாவின் 75வது குடியரசு தினத்துடன் ஒத்துப்போகிறது. இந்தியா கடைசியாக 2001-ல் (மும்பையில்) ஒரு IFR-ஐ நடத்தியது, அதன் பிறகு சமீபத்தியது 2016-ல் (விசாகப்பட்டினத்தில்) நடந்தது. எனவே, 2026 நிகழ்வு இந்தியாவால் நடத்தப்படும் மூன்றாவது சர்வதேச கடற்படைக் கூட்டம் ஆகும். இந்திய கடற்படை, SIMBEX, வருணா (Varuna), மற்றும் CORPAT போன்ற சுமார் 20 இருதரப்புப் பயிற்சிகளிலும் (bilateral exercises), மேலும் QUAD, MILAN, மலபார் மற்றும் கொங்கன் போன்ற பலதரப்பு ஈடுபாடுகளிலும் பங்கேற்கிறது.

