Tag: ஆசிய இளைஞர் கபடி

விளையாட்டு

ஆசிய இளைஞர் கபடி ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கபடியில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா ரமேஷு ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசை முதலமைச்சர் வழங்கினார். பஹ்ரைனின் ரிபாவில் உள்ள இசா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் 19 முதல் 23 வரை நடைபெற்ற இந்தப் போட்டிகளில் முதன்முறையாக கபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இந்தியா முதலிடம் பிடித்தது.